ஸ்பைசி கார்ன்

தேதி: December 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மனோகரி அவர்களின் ஸ்பைசி கார்ன் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.

 

மக்காச்சோளம் - 4
உப்பு சேர்த்த வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
உப்புத் தூள் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக வைக்கவும். மக்காச்சோளத்தை உரித்து சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மக்காச்சோளத்தைப் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும். சோளம் நன்கு வெந்தவுடன் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு பேனில் எண்ணெயையும், வெண்ணெயையும் போட்டு உருக்கவும்.
உருகியதும் அதில் தூள் வகைகளைப் போட்டு கலந்துவிட்டு இறக்கிவிடவும்.
பிறகு ஒரு சிறு ப்ரஷ் கொண்டு வெண்ணெய் சாஸைத் தொட்டு சோளத்தின் மீது பூசிவிடவும்.
டேஸ்டி ஸ்பைசி கார்ன் ரெடி. எலுமிச்சைச் சாறு தெளித்துப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய‌ கிச்சன் குயின் ரேவ்க்கு என் மனம் நிறைந்த‌ பாராட்டுக்கள். அருமையான‌ குறிப்புகள் ரேவ். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமா முகப்பை கலக்குது. மேலும் குறிப்புகள் வழங்க‌ என் அன்பு வாழ்த்துக்கள் ரேவ்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மிக்க நன்றி சுமி. உங்கள் அளவிற்கு என்னால் செய்ய இயலாது. இ்ப்பொழுது தான் சமையல் பயின்று வருகிறேன். உங்களை போன்ற ரோல் மாடல்கள் என்னை சமையில் மிகவும் ஈர்க்க காரணம்.. நன்றி டியர்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எனக்கு ரொம்ப பிடிச்ச கார்ன் சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்னைக்கு இத நான் பன்னுனேன்.ரொம்ப நல்லா இருந்து.எனக்கு ரொம்ப பிடிக்கும்.