பதிர் பேனி

தேதி: December 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

மைதா மாவு - ஒரு கப்
நெய் - 100 கிராம்
பொடித்த சர்க்கரை - சுவைக்கேற்ப
பாதாம் பால் - அரை லிட்டர்
உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை
அரிசி மாவு - அரை கப்


 

மைதா மாவுடன் உப்பு, சமையல் சோடா மற்றும் 50 கிராம் நெய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியான சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.
மீதிமுள்ள 50 கிராம் நெய்யை அரிசி மாவில் போட்டு பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சப்பாத்திகளாக திரட்டி, அரிசி மாவு பேஸ்ட்டை அதன் மீது நன்றாகத் தடவிக் கொள்ளவும். இதே போல் 6 சப்பாத்திகளை அரிசி பேஸ்ட் தடவி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கவும்.
அடுக்கியவற்றை அப்படியே சுருட்டவும்.
பிறகு அதைச் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய துண்டுகளை லேசாக திரட்டவும்.
அவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான பதிர் பேனி தயார்.
பரிமாறும் போது பாதாம் பால் ஊற்றி, சுவைக்கேற்ப பொடித்த சர்க்கரையைப் போட்டு பரிமாறவும்.

பொரிக்கும் போது அரிசி மாவு பிரிந்து எண்ணெயில் கலந்துவிடும். அதனால் அளவாக எண்ணெய் விட்டுப் பொரிக்கவும்.

பாதாம் பாலுக்கு பாதாம் மிக்ஸ் வாங்கி பாலில் கலந்து கொள்ளவும். பாலிலும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளலாம். அல்லது பொடித்த சர்க்கரை தூவி பால் விட்டும் பரிமாறலாம். அவரவரின் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பதர் பேனி படங்காட்டுது ரேவ்ஸ். படத்தை பார்த்தாலே சுவை அபாரமா இருக்கும் போல‌ தெரியுது..எனக்கு ரொம்ப‌ பிடிச்சு இருக்கு, செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் ..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சூப்ப்ர் ரேவ்ஸ் பதிர்பேனி நாங்களும் இதே போலதான் செய்வோம்.பாலில் ஊரவைக்காமல் சீனி பொடி செய்து மேலே தூவி வைத்தால் டின்னில் இருக்கமாக மூடிவைத்தால் ஒருமாதம் வரை வைத்து சாப்பிடலாம் மொருமொருன்னு சூப்பராயிருக்கும் நன்றிமா வாழ்த்துக்கள் இன்னும் நிரைய செய்யனும்

இந்த ஊர் ஸ்பெஷல்... ரொம்ப நாளா செய்ய ஆசை :) இங்கே இடியாப்பம் போல ஒன்னு கடையில் கிடைக்கும், அதை வாங்கியும் இதே போல ஊற வைத்து சாப்பிடுவார்கள். அதுவும் பதிர் பேனி என்றே சொல்கிறார்கள். சிரோட்டி செய்ய நினைத்திருக்கேன், ஏறக்குறைய இதே செய்முறை தான். அதை செய்தால் இதையும் செய்து படங்காட்டுறே ;) ரேவ்ஸ் குறிப்பை செய்து படங்காட்டலன்னா எப்படி?? சூப்பரா செய்திருக்கீங்க, சரியான முறையும் கூட.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதிர் பேனி பார்க்கவே ரொம்ப‌ நல்லா இருக்கு... புதிய‌ முயற்சிக்கு பாராட்டுகள்... பாலில் ஊறினால் சுவை அபாரமாய் இருக்குமே.. கலக்கல்

"எல்லாம் நன்மைக்கே"

பதர்பேனி பார்க்கவே சாப்பிட தோனுது ரேவ்ஸ் சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

செய்தாச்சு, சுவையும் பார்த்தாச்சு, படமும் காட்டியாச்சு :) சூப்பர் அம்மணி சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பதர் பேனி சூப்பர் ரேவா. பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு. வாழ்த்துகள் ரேவா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சூப்பர் செய்முறை மற்றும் படம பார்க்கும் போதே சாப்பிட்டு பார்க்க ஆசையாய் உள்ளது செஞ்சி சாப்பிட்டு சொல்றேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

கலர் சேர்க்காம ஒரிஜினல் கலருடன் அருமையா இருக்கு ;)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

பதர் பேனி ரொம்ப‌ சூப்பராக‌ இருக்கு ரேவதி

Jaleelakamal

குறிப்பை அழகாக எடிட்செய்து வெளீயிட்ட அட்மின்&டீம்க்கு நன்றீ

Be simple be sample

ஹாய் சுமி தாமதமான பதிலுக்கு சாரி. சாப்பிடவும் சூப்பரா இருக்கும். தான்க்யூ

Be simple be sample

ஆமாப்பா. தனியே சாப்பிடவும் நல்ல வாசமாதான் இருந்துது. தான்க்யூ நிஷா

Be simple be sample

ஹாய் செல்லம் . ரியலி சூப்பரா இருக்கும். வீட்டுக்கு வச் உனக்கு செய்து தரேன். தான்க்ஸ்

Be simple be sample

தான்க்யூ சுவா. நீங்களும் செய்துபார்த்துசொல்லுங்க.

Be simple be sample

உங்க படம் கலக்கல் வனி. சிரோட்டிக்கு வெயிட்டிங். தான்க்யூ வனி

Be simple be sample

தான்க்ஸ் ரேவ்.

Be simple be sample

தான்க்ஸ் ரேவ்.

ரேணுகா செய்துபார்த்திங்களா. தான்க்ஸ்பா.

ஜெய்லானி. நான் முதல் முறை இப்பதான் சாப்பிட்றேன். கலர் பேனி சாப்பிட்டா மறக்காம போட்டோ போடுங்க.தான்க்ஸ்

ஜலிலா அக்கா உங்க பதிவு பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு .தான்க்யூ

Be simple be sample