அவரைக்காய் கூட்டு

தேதி: December 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. செய்யது கதீஜா அவர்களின் அவரைக்காய் கூட்டு குறிப்பு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய செய்யது கதீஜா அவர்களுக்கு நன்றிகள்.

 

அவரைக்காய் - அரை கிலோ
வெங்காயம் - 200 கிராம்
மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
தேங்காய் விழுது - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப


 

அவரைக்காயை நடுத்தரமான அளவுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தில் சிறிதளவு தாளிப்பதற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய அவரைக்காயைப் போட்டு, அத்துடன் வெங்காயம் ,மசாலா தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்துப் பிரட்டி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் அவரைக்காய் கலவையைச் சேர்த்துக் கிளறிவிட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். காய் வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி குறைந்த தீயில் வைத்து 3 நிமிடங்கள் கழித்து தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
சுவையான அவரைக்காய் கூட்டு தயார். மீன் குழம்பு மற்றும் ப்ளையின் சாதத்துடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

அவரவர் விருப்பத்திற்கேற்ப தேங்காய் விழுது மற்றும் தேங்காய் பாலின் அளவைக் கூடுதலாகவோ, குறைத்தோ சேர்க்கலாம். இத்துடன் வரட்டிய இறால் சேர்த்துச் செய்தால் ருசியைக் கூட்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அவரைக்காய் கூட்டு நல்லாருக்கு காய் ஒரே மாதிரி அழகா கட் பன்னியிருக்கீங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி சுவர்னா..

ஆறும் அருமை..பளிச் படங்கள் ..அழகான Presentation
வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் கிச்சன் குயின்

என்றும் அன்புடன்,
கவிதா

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி கவிதா.