மெக்ஸிகன் சிக்கன் ஃப்ரை

தேதி: December 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஜுலைஹா அவர்களின் மெக்ஸிகன் சிக்கன் ஃப்ரை என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய ஜுலைஹா அவர்களுக்கு நன்றிகள்.

 

கோழிக்கறி - அரை கிலோ
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
வார்செஸ்டர்சயர் சாஸ் (Worcestershire sauce) - 3 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - ஒன்று
பூண்டு - 10 பற்கள்
தக்காளி சாஸ்
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

கோழிக்கறியைச் சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கிவிட்டு சற்று பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு கோழித் துண்டுகளுடன் மிளகாய்த் தூள், மிளகுத் தூள், உப்பு, வார்செஸ்டர்சயர் சாஸ் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து பிரட்டி குறைந்தது ஒரு மணி நேரம் வைத்திருக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பிரட்டி வைத்துள்ள கோழித் துண்டுகளைப் போட்டு அரை பதம் வேகவிடவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு நன்றாக வேகவிட்டு இறக்கவும்.
ஸ்பைசி மெக்ஸிகன் சிக்கன் ஃப்ரை ரெடி. தக்காளி சாஸ் ஊற்றி கலந்து சூடாகப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதுவும் ரொம்ப பிடிச்சிருக்கு... Worcestershire sauce - இவருக்கு பதில் வேறு எதாவது பயன்படுத்த முடியுமா இதுல? இந்த சாஸ் கட்டாயமா? எங்க வீட்டில் இதெல்லாம் பயன்படுத்த அனுமதி இல்லை :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Worcestershire sauce இல்லாமல் செய்யலாம். நான் செய்ததை பார்த்து sauce இல்லாமல் தங்கச்சி செய்து நல்லா இருந்த என்று சொன்னவ.

மெக்சிகன் சிக்கன் ஃப்ரை அப்படியே இங்க அனுப்பிடுங்க சூப்பரா இருக்கு :) நல்லவேலை சாஸ் தேவையில்லைன்னு சொன்னீங்க ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அனுப்பி விட்டேன் சுவர்னா.கிடைத்ததும் சொல்லுங்க.

சூப்பர் ஃப்ரைங்க‌. பார்க்கவே கலக்கலா இருக்கு. வாழ்த்துக்கள்!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நன்றி.

மெக்ஸிகன் சிக்கன் ஃப்ரை நல்லா வந்திருக்கு.. யம்மி :)

"எல்லாம் நன்மைக்கே"