கறைகளைப் போக்க வழி சொல்லுங்க தோழிஸ்,,,,,,

தோழிஸ் ப்ளீஸ் உதவுங்கள்,,,,வெள்ளை வேட்டியில் மஞ்சள் கறை பட்டு விட்டது,அதை எவ்வாறு நீக்குவது?????.
கலர் சட்டையில் பாக்கு துவர் பட்டு விட்டது அதையும் எவ்வாறு நீக்குவது ?????.யாராவது எனக்கு ஐடியா சொல்லுங்க தோழிஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..........

;) இப்படிலாம் விளம்பரம் வருது... ஆனா கரை ரொம்ப கெட்டது... போறதே இல்லையாக்கும் இந்த சோப்புக்கு எல்லாம்.

போட்டு பொட்டு தேச்ச பின் சர்ஃப் எக்ஸல் இருக்காது, கரை அங்கையே இருக்கும்.

எனக்கு வேனிஷ் ஓரளவு நல்லா ஒர்கவுட் ஆச்சுங்க. முக்கியமா மஞ்சள் கரைக்கு. கல்யாண சட்டை இவருடையதை அப்படி தான் வெளுத்தேன் மறுபடி. ஒரு முறைக்கு இரு முறை துவைக்க வேண்டி இருக்கும். வேனிஷ் வெள்ளை துணிக்குன்னு வருவதை வாங்குங்க. நேரடியா ஒரு முறை போடுங்க, அதில் இருக்க இன்ஸ்ட்ரக்‌ஷன் படிச்சு. அப்பறம் ஒரு முறை நீரில் சோப்பும் வேனிஷும் கலந்து ஊற வெச்சுட்டு துவைங்க. எஉமிச்சை பிழிஞ்சு விட்ட நீரிலும் ஊற வைக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எதுக்கும் நீங்க கப்சி, அக்கா மாலா போட்டு ட்ரை பண்ணுங்களேன். கரை போகும்.

உன்னை போல் பிறரை நேசி.

வனிதா அக்கா , ரொம்ப நன்றி கண்டிப்பா ட்ரை பன்றேன்...

ALLAHU AKBAR. . . .

தோழி நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு புரியல ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க தோழி....

ALLAHU AKBAR. . . .

அஸ்ஸலாமுஅலைக்கும் ஜாபிரா ஆலா போட்டு கொஞ்சனேரம் ஊரவைத்து துவைத்துபாருங்க போலேன்னா உப்புதூள் போட்டு எழுமிச்சைம்பழம் தேய்ங்க போய்டும் ட்ரைபன்னுங்க

வஅலைக்கும் ஸலாம் (வரஹ்)....நிஷாம்மா...கண்டிபாக நா ட்ரை பன்றேன் ,தோழிகள் சொன்ன வழி முறைல ஏதாச்சிம் ஒரு வழில கரை போனா சந்தோஷம் தான் ....நா போட்ட பதிவுக்கு உடனே பதில் அனுப்பிய அனைவருக்கும் நன்றிகள் :-)...

ALLAHU AKBAR. . . .

நீங்களா கிழிச்சு எடுக்கும் வரை வேட்டிக் கரை வேட்டிலயேதான் இருக்கும்னு இமா சொல்றாங்க. ;))) ம்... அது கரை இல்லை க..றை. :-)

வனி சொன்ன வனிஷ் நல்லது. கறை நன்றாக எடுபடும். எங்க வீட்ல அது எப்பவுமே இருக்கும். napisan, கொஞ்சமாக நீர் விட்டுக் குழைத்து கறையின் மேல் பூசி வைத்து பிறகு கழுவினாலும் போகும்.

கறை எந்த அளவு பிடித்து இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் முழுவதும் போவதோ கொஞ்சமாகப் போவதோ ஆகும். அதே போல எந்தக் கறையானாலும் கறை பட்ட உடனே நீக்க முயற்சி செய்தால் அதிகம் எடுபடும். காலம் விட்டு முயற்சி செய்தால் எடுபடுவது குறைவாக இருக்கும். ஆனாலும் மஞ்சட்கறை கொஞ்சம் பிடிவாதம் பிடிக்கலாம்.

அனேகமான கறைகள் சுடு தண்ணீர், உப்பு போட்டால் இறுகப் பிடித்துக் கொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும்.

‍- இமா க்றிஸ்

ஹஹஹா... எனக்கு டவுட்டு கறையா கரையான்னு... மேலே அவங்க பதிவை பார்த்தனா... சரி அவங்க தெரிஞ்சு தான் போட்டிருப்பாங்க, அதையே ஃபாலோ பண்ணுவோம்னு போட்டுட்டேன். ;)

உங்க தலைப்பை பார்த்ததும் என்ன மேடருன்னு ஓப்பன் பண்ணும் முன்னவே புரிஞ்சு போச்சு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் சந்தேகத்தில் தான் பதிவை போட்டேன் சாரி திருத்தி கொள்கிறேன்

ALLAHU AKBAR. . . .

கலர் துணியில் வேறு கலர் துணியின் சாயம் பட்டுவிட்டால் அதை எப்படி போக்குவது சீக்கிரமா சொல்லுங்கள் தோழிகளே

மேலும் சில பதிவுகள்