தேதி: December 17, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வசந்தா குமாரி செல்வராஜ் அவர்களின் தேங்காய் திரட்டுப் பால் குறிப்பு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய வசந்தா குமாரி அவர்களுக்கு நன்றிகள்.
தேங்காய் - 2
பயத்தம் பருப்பு - 100 கிராம்
வெல்லம் - அரை கிலோ
நெய் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் - 5
முந்திரி - 25 கிராம்
தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

துருவிய தேங்காயுடன் வறுத்த பயத்தம் பருப்பைச் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை சுத்தம் செய்து, அரைத்த கலவையுடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, அத்துடன் நெய்யையும் ஊற்றி ஒரு மணி நேரம் வேகும் வரை நன்றாகக் கிளறவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

கலவை திரண்டு வரும் போது இறக்கி ஆறவிட்டு, முந்திரியைச் சேர்க்கவும்.

சுவைமிகுந்த பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான தேங்காய் திரட்டுப்பால் தயார்.

Comments
hema
பார்க்கவே அழகா இருக்கு. சாப்டனும் போல நாக்குல எச்சில் ஊறுது. ஆனா 1 மணி நேரம் நின்னு பொருமையா கிண்டறதுக்கு பொருமை இல்ல. வீட்ல வாலு தாங்காது. அழும். நீங்க கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.
எல்லாம் சில காலம்.....
ஹேமா
ஹேமா இன்று முகப்பு மிகவும் பிரகாரசமா ஜொலிக்குது வாழ்த்துகள்ம்மா.. அனைத்து குறிப்புகளும் படங்களும் அருமை.. தொடர்ந்து உங்கள் குறிப்புகளை எதிர்ப்பார்க்கிறேன்.. வாழ்த்துகள்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
Cangrats queen hema super
Cangrats queen hema super thirattupal enaku rombapidikum kandipa seyren
hema sis
அன்பு ஹேமா சகோதரி,
தங்களின் பாரம்பரிய குறிப்பு மிகவும் அருமையாக உள்ளது. சுவையும் அப்படியே இருக்கும் என நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
நன்றி.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
Hai
All arusuvai Sister eni nanum Ungalil Oruthi. Anayum frieds listla joint punikongka please.
hi divya
welcome to arusuvai. divya நான் உங்களை ஃப்ரன்ட் லிஸ்ட்ல சேத்துட்டேன்.
எல்லாம் சில காலம்.....
ஹேமா
கிச்சன் குயின் ஹேமாவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் :) திரட்டுப்பால் பார்க்கவே சாப்பிடனும்னு தோனுது சூப்பர் கலக்கலான் ரெசிப்பீஸ் ஹேமா :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
Hema
கிச்சன் குயினுக்கு என் வாழத்துக்கள்.குறிப்புகள் அனைத்து சூப்பராஇருக்கு..
ஹேமா..
கிச்சன் குயின் ஹேமாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . எல்லாக் குறிப்புகளும் படங்களும் அருமை. மேலும் குறிப்புகள் வழங்க என் வாழ்த்துக்கள்..:0
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ஹேமா
வாழ்த்துக்கள்.. படங்கள் பார்க்கும் போதே சுவையாக இருக்கும்னு தெரியுது.. அருமை..
"எல்லாம் நன்மைக்கே"
பாலநாயகி
மிக்க நன்றிப்பா, எங்க வீட்லையும் வாலு தான் 2 வயசு ஆனால் தூங்கும் போது செய்து விடுவேன், இருந்தாலும் இன்னும் ப்ரசெண்டேஷன் நல்லா கொடுக்கணூம்னு ஆசை ஆனால் இதுக்கே அவசரமா செய்து போடுவேன்.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
ரேவ்ஸ்
ரேவ்ஸ் நன்றிப்பா, முகப்பு ஜொலிக்குதா? , நீங்கல்லாம் சொன்னா சரியா தான் இருக்கும்.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
நிஷா,சுவர்ணா,சுமி,மெர்சி
நிஷா: செய்து பாருங்க, சாப்பிடுங்க , கொண்டாருங்க, நன்றி
சுவர்ணா: நன்றிப்பா, திரட்டுப்பால் பார்த்த சாப்பிடணூம் போல இருக்கா அப்படியே ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிடுங்க பாப்போம், ம்ம் டேஸ்டி இல்ல...
சுமி: வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.
மெர்சி: வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா, ஆமாப்பா பாரம்பரிய சமையல் தான் , குழந்தைகளூக்கு மிகவும் நல்லது.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
தர்ஷா,பாக்யலஷ்மி
தர்ஷா: மிக்க நன்றிப்பா, இன்னும் பல குறிப்புகள் தர முயற்சி செய்கிறேன்.
பாக்யலஷ்மி: மிக்க நன்றிப்பா, உங்கள் வாழ்த்துக்கள் திரட்டுப்பாலே தான்.
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
நாவூறுது
ஸ்ஸ் தேங்காய் திரட்டுப்பால் நாவூறுது ஹேமா
Jaleelakamal