க்றிஸ்மஸ் க்ராக்கர்ஸ் - பாகம் 1

தேதி: December 17, 2014

5
Average: 5 (2 votes)

 

கிஃப்ட் ராப்
க்ராக்கர் ஸ்னாப்ஸ் - க்ராக்கருக்கு ஒன்று
டாய்லட் ரோல்கள் - க்ராக்கருக்கு ஒன்று + 2
மெல்லிய அட்டைகள் - 2
க்றிஸ்மஸ் கார்ட்
கர்லிங் ரிப்பன் - க்ராக்கருக்கு ஒரு மீட்டர்
கத்தரிக்கோல்
க்ராஃப்ட் நைஃப்
ஸ்கேல்
பேனை
டபுள் சைடட் டேப்
அன்பளிப்புகள்
ரப்பர் பாண்ட்
செல்லோ டேப்
டிஷ்யூ பேப்பர் (முடி செய்வதற்கு)
ஜோக் (விரும்பினால்)

 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். டாய்லட் ரோல் குழாய்கள் பொதுவாக 10 செ.மீ நீளம் கொண்டவைகளாக இருக்கும். சுற்றளவு, தயாரிப்பைப் பொறுத்து, 13.7 செ.மீ முதல் 14.7 செ.மீ வரை இருக்கக் கூடும். மூன்றும் ஒரே வகைக் குழாய்களாகத் தெரிந்து கொள்ளாவிட்டால் க்ராக்கர்கள் நேர்த்தியாக அமையாது.
'க்ராக்கர் ஸ்னாப் இன்சர்ட்ஸ்', க்ராஃப்ட் கடைகள் அல்லது டாலர் ஸ்டோர்களில் கிடைக்கும். (இங்கு ஒரு டசின் ஸ்னாப்கள் $ 2.00 வீதம் வாங்கக் கூடியதாக இருந்தது). இந்த ஸ்னாப்கள் பொதுவாக 30 செ.மீ நீளமாக இருக்கும். இவற்றின் இரண்டு ஓரங்களிலும் சிறிது நறுக்கிச் சிறிய க்ராக்கர்களுக்குப் பயன்படுத்தலாம். க்ராக்கர்களில் உள்ள ஸ்னாப் இழுபடும் போது சின்னதாக வெடிச் சத்தம் கேட்கும். இவை இல்லாமலும் க்ராக்கர்கள் செய்யலாம்.
கடதாசியை 33 செ.மீ x 16 செ.மீ அளவில் வெட்டிக் கொள்ளவும். ஏற்கனவே சுருட்டி வைக்கப்பட்டிருந்த கடதாசியாக இருந்தால், அதன் போக்கைக் கவனித்து வெட்டவும். (மெட்டாலிக் ஃபாயில், ஹொலோக்ராஃபிக், செலோஃபேன் வகை கடதாசிகளைத் தவிர்க்கவும். இங்கு பயன்படுத்தியிருப்பது, சாதாரண கடதாசி போன்ற பின்பக்கம் கொண்ட மெட்டாலிக் ராப்). ஸ்னாப்பின் இரண்டு ஓரங்களில் மட்டும் (நடுவில் ஒட்டினால் க்ராக்கரைப் பிரிக்கும் போது சப்தம் வராமற் போகலாம்.) டபுள் சைடட் டேப் போட்டு, காட்டியுள்ளபடி ஒட்டவும். இரண்டு வெளி ஓரங்களிலும் ஒரே அளவு இடம் விடப்பட வேண்டும். கடதாசியின் நீளமான ஓரத்திலிருந்து 4 செ.மீ அளவு உள்ளே தள்ளி ஒட்டவும்.
இரண்டு நீள அட்டைகளைச் சுருட்டி தனித்தனியே இரண்டு குழாய்களுள் சொருகவும். சிறிய பக்கங்கள் ஒவ்வொன்றும் 3 முதல் 4 சென்டிமீட்டருக்குள் இருக்க வேண்டும். மறு பக்கம் 3 சென்டிமீட்டருக்கு அதிகமாக இருக்க வேண்டும். அட்டைகளின் திறந்திருக்கும் ஓரங்களில் டேப் போடவும். கூடவே, குழாய் அட்டையிலிருந்து விலகாத விதமாக இரண்டையும் சேர்த்து ஒட்டிக் கொள்ளவும்.
பயன்படுத்தப் போகும் குழாயை இரண்டுக்கும் நடுவில் சொருகிக் கொள்ளவும்.
இப்போது வெட்டி வைத்துள்ள கடதாசியின் மேல் குழாயை வைத்தால், கடதாசி தானாகவே மூடிச் சுருள ஆரம்பிக்கும்.
கடதாசியின் மறு ஓரத்தில், நீளமாக மூன்று துண்டு டபுள் சைடட் டேப் துண்டுகளை ஒட்டித் தயாராக வைக்கவும்.
இரண்டு வெளி ஓரங்களும் நேராக வரும் விதமாக இறுகச் சுருட்டிக் கொண்டு, டேப்களைப் பிரித்து ஒட்டிக் கொள்ளவும்.
ஒரு பக்கத்து அட்டையைப் பிடித்து 5 செ.மீ வெளியே இழுக்கவும். (எப்படியும் ஒன்றுக்கும் அதிகமாகத்தான் க்ராக்கர்கள் செய்ய வேண்டி வரும். முன்பே இரண்டு குழாய்களிலும் அளந்து அடையாளம் செய்து வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறையும் அளக்க வேண்டிய அவசியம் இருக்காது).
பிறகு கடதாசி கிழிந்து விடாமல், கைகளால் பிடித்துச் சுருக்கவும்.
குழாய்கள் இரண்டையும் மெதுவாக முறுக்கிக் கொண்டே நெருக்கவும். கடதாசி பொருத்தும் இடத்தைக் கவனித்து சரியான போக்கில் முறுக்க வேண்டும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்