க்றிஸ்மஸ் க்ராக்கர்ஸ் - பாகம் 2

தேதி: December 17, 2014

Average: 5 (1 vote)

 

கிஃப்ட் ராப்
க்ராக்கர் ஸ்னாப்ஸ் - க்ராக்கருக்கு ஒன்று
டாய்லட் ரோல்கள் - க்ராக்கருக்கு ஒன்று + 2
மெல்லிய அட்டைகள் - 2
க்றிஸ்மஸ் கார்ட்
கர்லிங் ரிப்பன் - க்ராக்கருக்கு ஒரு மீட்டர்
கத்தரிக்கோல்
க்ராஃப்ட் நைஃப்
ஸ்கேல்
பேனை
டபுள் சைடட் டேப்
அன்பளிப்புகள்
ரப்பர் பாண்ட்
செல்லோ டேப்
டிஷ்யூ பேப்பர் (முடி செய்வதற்கு)
ஜோக் (விரும்பினால்)

 

முறுக்கிய இடத்தை 50 செ.மீ அளவான கர்லிங் ரிப்பனால் கட்டிவிடவும். ரிப்பனின் புறப்பக்கம் கத்தரிக்கோலை வைத்து அழுத்தமாக இழுத்து விட்டால் ரிப்பன் சுருண்டுகொள்ளும். (இரண்டாவது பக்கத்தை இப்போது கட்ட வேண்டாம். குழாயையும் முழுவதாக வெளியே எடுக்க வேண்டாம்).
முடி செய்வதற்கு டிஷ்யூ பேப்பரை படத்தில் காட்டியுள்ளபடி மடித்து எடுக்கவும்.
பிறகு அதை விரும்பிய விதமாக வெட்டி எடுக்கவும்.
50 செ.மீ x 66 செ.மீ கடதாசி ஒன்றுக்கு, அதை மடிக்கும் விதத்தைப் பொறுத்து ஆறு முடிகள் வரையில் வெட்டலாம். முடிகளைத் தனித்தனியாக வெட்டிப் பிரித்துக் கொள்ளவும். (ஒரே விருந்திற்காக க்ராக்கர்கள் செய்யும் போது ஒவ்வொன்றினுள்ளும் வெவ்வேறு நிற முடிகள் வைத்தால் தான் சுவாரசியமாக இருக்கும்).
பர்சனலைஸ்ட் க்ராக்கர்கள் செய்வதானால், பெற்றுக் கொள்ளப் போகிறவரின் தலை அளவை ஓரளவு ஊகிக்க முடியும். அவருக்கு ஏற்ற அளவிற்கு முடியை ஒட்டி வைக்கலாம். அல்லது இங்கு காட்டியிருப்பது போல, வெட்டிய கடதாசியின் ஒரு ஓரத்தில் டபுள் சைடட் டேப் போட்டு விட்டால், அணிபவர் தன் அளவிற்கு ஒட்டிக் கொண்டு மீதியைக் கிழித்து விடலாம்.
உள்ளே வைப்பதற்கு, பொருத்தமான சிறிய அன்பளிப்புகளாகத் தெரிந்து கொள்ளவும். அவற்றுடன் தயார் செய்த முடியையும், ஜோக் ஒன்றையும் தயாராக மடித்து வைக்கவும். (ஒரு சின்னவருக்காகத் தயார் செய்த க்ராக்கர் இது. உள்ளே வைக்க முடியுடன், சிறிய பொம்மைக் கார், மிட்டாய் பாக்கட், ஸ்டிக்கர் ஷீட் என்பவற்றைத் தெரிந்து கொண்டேன்).
எல்லாவற்றையும் ஒன்றாகச் சுருட்டி ரப்பர் பாண்ட் போடவும். க்ராக்கரின் திறந்து இருக்கும் பக்கத்தின் வழியே அன்பளிப்பை உள்ளே போடவும். நீளக் குழாயை மேலும் கீழுமாக அசைத்தால் அன்பளிப்புகள் அடியில் போய்ச் சேர்ந்துவிடும். முன்பு செய்தது போல இந்தப் பக்கத்தையும் கட்டி ரிப்பனைச் சுருட்டிவிடவும்.
சிறிய படங்கள் உள்ள க்றிஸ்மஸ் வாழ்த்திதழாகத் தெரிந்து, பயன்படுத்தப் போகும் படத்தை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டி எடுத்ததை டபுள் சைடட் டேப் போட்டு க்ராக்கரில் ஒட்டிக் கொள்ளவும். கிராக்கரை ரிப்பன்கள், லேஸ் என்று பொருத்தமான எதைக் கொண்டும் அலங்கரிக்கலாம். பர்சனலைஸ்ட் ஆக இருக்குமானால் கிஃப்ட் டாக் கட்டிவிடலாம். அல்லது அவர்கள் பெயரை ஒட்டியும் அலங்கரிக்கலாம்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் க்றிஸ்மஸ் விருந்துகளில் பான்பான் (Bonbon) எனப்படும் க்றிஸ்மஸ் க்ராக்கர்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. க்ராக்கரின் ஓரங்கள் வழியே ஸ்னாப் முனைகள் தெரியும். திறக்கும் போது இரண்டு பக்கங்களில் பிடிப்பவர்களும் ஸ்னாப்பையும் சேர்த்துப் பிடித்தாற் போல் இழுக்க வேண்டும். ஒருவரே திறக்க வேண்டுமானால், சுருக்கிக் கட்டியுள்ள இடங்களில் ஒரே சமயம் இறுகப் பிடித்துக் கொண்டு இரண்டு பக்கமும் இழுக்க வேண்டும்.
படத்திலுள்ள இரண்டாவது க்ராக்கர் ஸ்னாப் வைக்காமல் செய்தது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

எடிட்டிங் சூப்பர் டீம். :-) என் அன்பு நன்றிகள்.

‍- இமா க்றிஸ்

இதையெல்லாம் வீட்டிலேயே தயாரிக்கலாம் என்பது உங்களின் செய்முறையைப் பார்த்த பிறகுதான் தெரிகின்றது. கடைகளில் கிடைப்பது போன்று நேர்த்தியாக செய்திருக்கின்றீர்கள். அதுதான் உங்களின் ஸ்பெஷாலிட்டி. :-) பார்த்துவிட்டு பாராட்டாமல் போக முடியவில்லை. சூப்பர்!!

கடைல வாங்குறதுல சும்மா லூஸ் ஜோக்லாம் இருக்கும். எனக்குப் புரியிறதே இல்லை. முடி கூட எனக்கு லூ..ஸா இருக்கும். ;) உள்ள கிஃப்ட்னு என்னவோ சம்பந்தமேயில்லாம சின்னச் சின்ன ப்ளாஸ்டிக்லாம் வைக்கிறாங்க. அதை போர்ட்கேம் காயினா வேணும்னா யூஸ் பண்ணலாம். பெரியவங்க, குழந்தைகள் எல்லோருக்கும் இதேதான் கிடைக்கும். வீட்ல செய்தா கீ ரீங், விரும்பினா நிஜ ரிங் கூட வைக்கலாம்.

முன்னால எல்லாம் ஸ்னாப் இல்லாமல் தான் செய்வேன். (கடைசி நேரத்துல செய்வேன். ஃபோட்டோல்லாம் எடுத்து அனுப்ப முடியுறது இல்லை.) சில வருடங்களுக்கு முன்னாலதான் ஸ்னாப் இவ்வளவு மலிவா கிடைக்குது என்று தெரிஞ்சுது. //நேர்த்தி// கர்ர்ர். இதுக்கென்று பொருள் வாங்கினா இன்னும் நேர்த்தியா வரும். கிஃப்ட் தவிர மீதில்லாம் வீட்ல இருந்த ஸ்டாக்.

தலையே வந்து பாராட்டுறது... ஜில்ல்ல்...னு இருக்கு. :-) இப்பிடியே ஒவ்வொரு க்ராஃப்டுக்கும் வந்து ஏதாச்சும் சொல்லி வைங்க. அப்போதான் அடிக்கடி க்ராஃப்ட் அனுப்பத் தோணும். :-) நன்றி பாபு.

‍- இமா க்றிஸ்

க்றிஸ்மஸ் க்ராக்கர்ஸ் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு, நேர்த்தியாக செய்து காட்டி இருக்கீங்கம்மா. நவீனாக்கு கிஃப்ட் பேக் செய்து எதுக்கொடுத்தாலும் ரொம்ப பிடிக்கும். அவள சர்ஃப்ரைஸ் பண்ண எனக்கு ஒரு நல்ல ஐடியா தாங்ஸ்ம்மா :-))))
ஒரு சின்ன சந்தேகம் ///குழாயையும் முழுவதாக வெளியே எடுக்க வேண்டாம்///
அப்படினா எப்போது குழாயை எடுக்கனும்.

தலை கீழாகப் பிடித்து இரண்டாவது பக்கத்தின் வழியே அன்பளிப்பைப் போட்டு, அந்தப் பக்கமும் கட்டி ரிப்பனை சுருட்ட இருக்கிறது. பிறகு அழகுபடுத்தும் வேலையும் இருக்கிறது. இடையில் பல தடவை மேசையில் வைத்து வைத்து எடுக்க இருக்கும். குழாயை முன்பே எடுத்து விட்டால் மடிப்புகள், கசங்கல்கள் ஏற்படச் சாத்தியம் அதிகம். சின்னதாக தட்டுப் பட்டாலும் கடதாசி மடிந்துவிடும். அப்படி எதுவும் இல்லாமல் புதிது போல இருக்க வேண்டுமானால். எல்லா வேலைகளும் முடியும் வரை இரண்டு குழாய்களையும் வைத்திருப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

இம்மா சூப்பர் இதுக்கு உங்களுக்கு ஒரு ஓஓ போடனும்.இந்த புதுமை படைப்பதில் இம்மாவுக்கு நிகர் இம்மாதான்.கலக்குரீங்க கிருஸ்மஸ் கேக் ரெடி ஆகிட்டா பார்சல் ப்லீஸ்

//புதுமை படைப்பதில்// அவ்வ்! நான் எதுவுமே படைக்கவில்லை நிஷா. அறுசுவைக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம். உண்மையில் ரொம்..பப் பழங்காலத்து வழக்கம் இது.

//கிருஸ்மஸ் கேக் ரெடி ஆகிட்டா// இல்லை. அப்படி ஸ்பெஷலாக எல்லாம் செய்வது இல்லை. என் ரசிப்பு, கிடைக்கும் நேரம், யார் எப்போ வருவார்கள் என்பதைப் பொறுத்துத்தான் எதுவும். நேரத்தையும் பொருளையும் வீணாக்க விருப்பமில்லை. அதற்காக மீதி எல்லாம் நானே சாப்பிட்டு நோய் தேடவும் முடியாது இல்லையா! :-) கேக் செய்யத் தோன்றவில்லை இன்னமும். செய்தால் உங்களுக்குப் பார்சல் அனுப்புறேன். :-)

‍- இமா க்றிஸ்

இவர் யாரு எதுக்குன்னு எனக்கு நிச்சயம விளங்கல... ஆனா ஒன்னு... முகப்புல பார்க்க பெரிய சாக்லேட் மாதிரி கலர்ஃபுலா அழகா இருக்கார். இந்த பேப்பரை எப்படி கொஞ்சம் கூட கசங்காம பண்ணீங்கன்னு தான் யோசிச்சுட்டே இருக்கேன். எனக்கு இம்புட்டு பக்குவமா ஹேண்டில் பண்ணவெல்லாம் வரவே வராது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//யாரு// க்றிஸ்மஸ் க்ராக்கர் வனி.
//எதுக்கு// க்றிஸ்மஸ் பார்ட்டி... டின்னர், லஞ்சுக்கு ஆளுக்கு ஒன்று.

//பெரிய சாக்லேட் மாதிரி கலர்ஃபுலா அழகா// நோக்கம் அதுதான். அப்படித்தான் தெரிய வேண்டும். ஆனா உள்ளே சர்ப்ரைஸ் இருக்க வேண்டும்.

//பேப்பரை எப்படி கொஞ்சம் கூட கசங்காம பண்ணீங்க// அப்படிப் பண்ணாட்டா பிரயோசனம் இல்லை. கசங்கி, மடிப்பு வந்து பழசு போல தெரியக் கூடாது. அதற்காகத்தான் ரெண்டு சைட் குழாயும் வைக்கிறது. முழுமையாக வேலை முடியும்வரை எடுக்கக் கூடாது. பாக்கிங்... பெட்டி 'சரியான' அளவில் இருக்கணும்.

சாஸர் க்ராக்கர்ஸ் சின்னதா இருக்கும். அது ஈஸியா கசங்காம பண்ணலாம். உள்ள வைக்கிற பொருட்கள் தேடுறதுதான் கஷ்டம்.

‍- இமா க்றிஸ்

க்ராக்கர் பார்க்க‌ அழகா இருக்கு. நேர்த்தியா இருக்கு.
ஆனா நான் பார்த்ததே இல்லை...... ?

//நான் பார்த்ததே இல்லை// அங்க செலெக்டிவா சில கடைகள்ல கிடைக்கக் கூடும்.

‍- இமா க்றிஸ்