சீனி அவரைக்காய் பருப்பு கூட்டு

தேதி: December 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

திருமதி. மகாலெட்சுமி ப்ரகதீஷ்வரன் அவர்கள் வழக்கியுள்ள சீனி அவரைக்காய் பருப்பு கூட்டு என்ற குறிப்பு கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்கள் செய்து விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய மகாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

பொடியாக நறுக்கிய சீனி அவரைக்காய் - ஒரு கப்
துவரம் பருப்பு - அரை கப்
சாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவைக்கேற்ப


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஊறியதும் குக்கரில் போட்டு, அத்துடன் சீனி அவரைக்காயையும் சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சாம்பார் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்துப் பிரட்டவும்.
அத்துடன் வேக வைத்த‌ சீனி அவரைக்காய், பருப்புக் கலவையைச் சேர்த்து கலந்துவிடவும்.
நன்றாகக் கலந்துவிட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து தண்ணீர் வற்றி கெட்டியான பதத்திற்கு வரும் போது இறக்கவும்.
சுவையான சீனி அவரைக்காய் பருப்பு கூட்டு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரானா கூட்டு நல்லாருக்கு மெர்சி :) சீனி அவரக்காய் என்பது கொத்தவரங்காய்னு சொல்லுவோமே அதுதானா ?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அதேதானுங்க‌. கொத்தவர்ங்காய்தான். வாழ்த்துக்கு நன்றி சிஸ்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Never tried kuutu with cluster beans. Looks gud... will try :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் பொறியல்தான் பண்ணிருக்கேன். கூட்டு வித்தியாசமா இருந்தது. பருப்பு ஒவ்வொன்றும் வேறுபடும்ல‌ குழையலனா இன்னும் நல்லா வந்திருக்கும்.
நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!