கிளன்சர்,டோனர்,மாய்சுரைசர்

இயற்கையான கிளன்சர்,டோனர்,மாய்சுரைசர் எது? நன்றி.

பால் , தேன் , மற்றும் எண்ணெய் .... வேறு ஏதேனும் பயன்படுத்தலாம் எனில் தெரிவிக்கனும்.

நன்றி Mythili.

டியர் வினோதா அவர்களுக்கு, நல்ல பயனுள்ள கேள்வி இது. வீணாக பணத்தை விரயமாக்காமல் வீட்டில் கிடைக்ககூடிய பொருட்களைக் கொண்டே சருமத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.
கிளன்ஸிங் செய்ய பால் மிகவும் நல்லது.அதனுடனோ அல்லது தனியாகவோ கடலைமாவு, சிறுபருப்பு மாவு, பாதாம் பருப்பு,ஓட்ஸ்,காய்ந்த பழத்தோல்கள்
போன்று இயற்க்கையான பொருட்களை பயன்படுத்தலாம்.
சருமத்திற்க்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பொருட்களைதான் டோனர் என்கின்றோம்.அவை இயற்க்கையான பழங்களிலும், மலர்களிலிருந்து பெறலாம்.சுலபமாகக் கிடைக்ககூடிய
ரோஸ் வாட்டர்,மற்றும் எலுமிச்சைசாற்றிலிருந்தும் பெறலாம்.நல்ல கொதிக்க வைத்த தண்ணீரில் இவைகளின் சாற்றை கலக்கி வைத்து உபயோகிக்கலாம்.
மாயிஸ்சுரைசருக்கு இருக்கவே இருக்கிறது,தேங்காய் எண்ணெய். இவை மாயிஸ்சுரைசர் மட்டும்மல்ல நல்ல கிளன்ஸரும்கூட. ஒகேவா, நன்றி.

நன்றி Manohari Madam.

மேலும் சில பதிவுகள்