சாசேஜ் சாண்ட்விச்

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

ப்ரெட் துண்டுகள்
சிக்கன் சாசேஜ் (Chicken Sausage)‍ - 5
வெங்காயம் - ஒன்று
தக்காளி சாஸ் - சிறிது
சீஸ் - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய்


 

சிக்கன் சாசேஜை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து, குறுக்கு வாட்டில் வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக‌ எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு ப்ரெட் துண்டின் மீது சாசேஜைப் பரவலாக வைக்கவும்.
அதன் மேல் நறுக்கிய வெங்காயத்தை வைக்கவும். பிறகு தக்காளி சாஸ் ஊற்றி, கொத்தமல்லித் தழையை பரவலாக‌த் தூவவும்.
பிறகு அதன் மீது சீஸை வைக்கவும்.
அதனை மற்றொரு ப்ரெட் துண்டை வைத்து மூடி, டோஸ்டரில் வைத்து எடுக்கவும்.
டேஸ்டி சாசேஜ் சாண்ட்விச் (Sausage Sandwich) ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா இருக்குங்க‌ சாசேஜ் சாண்ட்விச்.....

வாழ்த்துக்களுடன்,
கவிதாசிவகுமார்.

anbe sivam

சூப்பரானா சாண்ட்விச் வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பரா இருக்கு சாண்ட்விச்.