உருளைக்கிழங்கு போண்டா

தேதி: January 25, 2007

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
பெரிய வெங்காயம் - இரண்டு
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு சிறியத்துண்டு
பூண்டு - இரண்டு பற்கள்
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - அரைத்தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடலை மாவு - இரண்டு கோப்பை
ஆப்பச்சோடா - ஒரு சிட்டிகை
எண்ணெய் - இரண்டு கோப்பை
கொத்தமல்லி - ஒரு பிடி


 

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கிழங்குடன் சேர்த்து கலக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைச் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பை, கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
பிறகு அரைத்த கலவையைப்போட்டு வதக்கி அரைதேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி உப்புத்தூளைப் போட்டு கலக்கி கிழங்குக் கலவையுடன் நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
பிறகு கடலைமாவில் ஆப்பச்சோடா மற்றும் மீதியுள்ள உப்புத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.
பிறகு அடுப்பில் சூடான எண்ணெய் இருந்தால் அதில் ஒரு மேசைக்கரண்டியை எடுத்து மாவில் ஊற்றி தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
பிறகு தயாரித்துள்ள கிழங்கு கலவையிலிருந்து எலுமிச்சையளவு உருண்டையாக எடுத்து மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
சூடாக இந்த உருளைக்கிழங்கு போண்டாவை தேங்காய் சட்னியுடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி அக்கா நலமா? இன்று உருளைக்கிழங்கு போண்டா செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது.
நான் மைதாமாவில் தான் உருண்டைகளை தோய்த்து
எடுப்பேன். இம் முறை கடலை மாவில் செய்தேன் வித்தியாசமான சுவையாக நன்றாக இருந்தது. படங்கள் எடுத்து வைத்திருக்கிறேன்.அட்மினுக்கு அனுப்பிவைகிறேன். உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

டியர் வத்சலா இப்போது எங்க வீட்டு குக்கரில் கிழங்கு வெந்துக் கொண்டிருக்கின்றது வேறென்ன போண்டா செய்யத்தான் உங்க பின்னூட்டத்தைப் பார்த்ததும் செய்ய நினைப்பு வந்துவிட்டது. நீங்க இந்த குறிப்பைச் செய்து பார்த்து படங்களும் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.