அன்னாசிப் பழ ஜாம்

தேதி: December 22, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அன்னாசிப் பழம் - பாதி
சீனி - ஒரு கப்
மஞ்சள் கலர் - ஒரு சிட்டிகை


 

அன்னாசிப் பழத்தின் தோலைச் சீவி விட்டு, வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதன் நடுவில் உள்ள தடிமனான பகுதியை வெட்டி நீக்கிவிடவும்.
பிறகு பழத்தைப் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, கலர் பவுடர் சேர்த்து சீனி கரையும் வரை கொதிக்கவிடவும்.
சீனி கரைந்தவுடன் அன்னாசிப் பழத் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
பழத் துண்டுகள் வெந்து, பாகுடன் சேர்ந்து திக்காகும் வரை வைத்திருந்து இறக்கவும்.
சுவையான அன்னாசிப் பழ ஜாம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் வாவ் வாவ்.... எல்லாமே சூப்பர் :) ஃபோட்டோக்ராஃபர் யாரு?? ;)

செண்பகா அழகா செய்து காட்டி இருக்கீங்க, பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு. உங்க குறிப்பு வருவதே ரேர்... அப்படி ஒரு ஆள்கிட்ட இருந்து முகப்பு முழுக குறிப்புகள்னா சந்தோஷமா தானே இருக்கும் :) வனி வெரி ஹெப்பி அண்ணே. மனம்நிறைந்த வாழ்த்துக்கள் செண்பகா. இனி வரும் பகுதிகளிலும் கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் ..சூப்பர். கல‌ர் சும்மா அள்ளுது. கலர்க்காகவே நானும் செய்து பார்த்துடறேன்..வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

எல்லா குறிப்புகளுமே சூப்பரோ சூப்ப்ர் அண்ணி. ஜாம் ரொம்ப‌ ஈஸியான‌ செய்முறை.
ஒவ்வொரு பிரசன்டேசனும் கலக்கலா இருக்கு.
ஆமாம் அறுசுவையின் ராணிக்கு மற்றுமொரு ராணி பட்டம்.
குயினுக்கு என் மனமார்ந்த‌ வாழ்த்துக்கள்.
நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

வாழ்த்துக்கள்,எல்லா குறிப்பும் சூப்பர்.அன்னாசிப் பழ ஜாம் செய்து பார்க்கிறேன்.படங்கள் பளீச்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அண்ணி சூப்பர். ஒவ்வொரு படமும் தெள்ள தெளிவா இருக்கு. செய்முறையும் ரொம்ப ஈசி.. நிச்சயம் செய்துபார்க்கிறேன். வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Alaharku...
Congrts