உருளைக்கிழங்கு சிப்ஸ்/French fries

தேதி: January 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
எண்ணெய் - இரண்டு (அ) மூன்று கோப்பை
உப்புத்தூள் - கால் தேக்கரண்டி


 

உருளைகிழங்கை சுத்தமாக கழுவி ஈரம் போக நன்கு துடைக்க வேண்டும்.
பிறகு அவற்றை நம் விரல் அளவிற்க்கு தடிமனான துண்டுகளாக நீளமாக நறுக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காய வைத்து நறுக்கிய துண்டுகளை சிறிது சிறிதாக எடுத்துப் போட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்க்கு வறுத்து எடுத்து வைக்கவும்.
இவ்வாறு பொரிப்பதால் கிழங்கில் உள்ள ஈரம் தான் போய்யிருக்குமே ஒழிய சிப்ஸ் நல்ல மொரு மொருப்பாக இருக்காது. ஆகவே சிறிது ஆறியவுடன் அல்லது தேவைப்படும் பொழுது மீண்டும் எண்ணெயை நன்கு காயவைத்து முன்பு செய்ததுப் போல் போட்டு இந்த முறை நன்கு சிவக்க வறுத்து எடுக்கவும்.
வறுத்த சிப்ஸ்ஸை எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தில் போட்டு உப்புத்தூளை சேர்த்து நன்கு குலுக்கி விடவும்.
இந்த சுவையான ஃபிரன்ச் ஃரைஸ்ஸை தக்காளி கெட்சப்புடன் சூடாக பரிமாறவும்.


எண்ணெய் நன்கு சூடாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் சிப்ஸ் நல்ல கிரிஸ்பாக இருக்கும். எண்ணெயில் கிழங்குத் துண்டுகளைப் போடும் பொழுது கைகளால் எடுத்துப் போடாமல் கரண்டியின் உதவியால் துண்டுகளை எடுத்து மெதுவாக போடவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா உருளைகிழங்கு சிப்ஸ் செய்தேன். மொறு மொறுப்பாக இல்லை. சீக்கிரமே சோர்ந்து போய்விட்டது. இருந்தாலும் பிள்ளைகள் சாப்பிட்டார்கள். நல்ல மொறு மொறுப்பாக, சீக்கிரம் சோர்ந்து போகாமல் இருக்க என்ன செய்யலாம்? அக்கா. உங்க ஆலோசனை தேவை. நன்றி அக்கா.

டியர் அரசி இந்த குறிப்பை செய்துபார்த்ததற்கு மிக்க நன்றி. இந்த சிப்ஸ் நல்ல மொறு மொறுப்பாக வர நான் செய்முறையில் குறிப்பிட்டுள்ளதுப் போல் டபிள் ஃபிரை செய்ய வேண்டும் இல்லையென்றால் சீக்கிரத்தில் நமுத்துவிடும், முடிந்தால் மீண்டும் ஒரு முறை டிரைச் செய்து பாருங்க நிச்சயம் உங்களை ஏமாற்றாது.பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அக்கா நான் நீங்க சொன்ன மாதிரி டபுள் பிரை தான் பண்ணினேன். அக்கா அப்படி பிரை பண்ணும்போது புரவுன் கலர் வர்ற வரைக்கும் பண்ணனுமா? என் குழந்தைகளுக்கு பிடித்தமானது அதனால் என்க்கு நீங்க கொஞ்சம் விளக்கினால் நல்லது. நன்றி அக்கா