ஈசி ப்ரெட் உப்புமா

தேதி: December 23, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்கள் வழங்கியுள்ள ஈசி ப்ரெட் உப்புமா என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.

 

ப்ரெட் துண்டுகள்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி


 

ப்ரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடி செய்து 2 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
அத்துடன் பொடித்த ப்ரெட்டைச் சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
சுவையான ப்ரெட் உப்புமா தயார்.

உப்பு சேர்க்கும் போது வெங்காயத்திற்கு தேவையான அளவு மட்டும் சேர்த்தால் போதுமானது.

இத்துடன் தேங்காய் துருவல், வறுத்த வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து செய்தால் இன்னும் சுவை கூடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஈசி ப்ரெட் உப்புமா அசத்தலா இருக்கு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.

அட நம்ம கவிசிவா ரெசிபி.. இதை நான் ஏற்கனவே செய்திருக்கனே ;) எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு கொடுத்த கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்:)

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

நன்றி தர்ஷா:)

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

நன்றி வனி,அவசர நேரத்துல லன்ச்பாக்சுக்கு உதவும் டிஷ் இது.

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.