கொள்ளு பொடி

தேதி: December 23, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (6 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கவிசிவா அவர்கள் வழங்கியுள்ள கொள்ளு பொடி என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கவிசிவா அவர்களுக்கு நன்றிகள்.

 

கொள்ளு - 200 கிராம்
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒன்றரை மேசைக்கரண்டி
வரமிளகாய் - ஒன்று
பூண்டு - 5 பற்கள் (பிடிக்காதவர்கள் சேர்க்க வேண்டாம்)
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

கொள்ளைக் கழுவி சுத்தம் செய்து, ஒரு துணியில் போட்டு ஈரம் போக உலர்த்தவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து உலர்ந்த கொள்ளு, வரமிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை சிவக்க வறுக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி உப்பு சேர்த்து, ஒரு நிமிடம் கழித்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
சாதத்தில் போட்டு, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து சாப்பிட சுவையான கொள்ளு பொடி தயார்.

வாணலி சூடாக இருக்கும் போதே உப்பு சேர்ப்பதால் உப்பின் ஈரத்தன்மை போய்விடும். அதனால் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும். இட்லி மிளகாய் பொடி தயார் செய்யும் போதும் உப்பை வறுத்து சேர்த்தால் பொடி நமர்த்து போகாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Nan today kollu podi pannunen. Konjam siragam smell varuthu.1 1/2 spoon than potten nenga sonna mathiri than pannunen ippadi than irukkumo

கொள்ளு பயிற விடவே மாட்டீங்களா? உங்களுக்கு சேராதுனு பூங்கோதை அம்மா சொன்னாங்களே

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அபி உங்க பதிவ பார்ததும் சிரித்து விட்டென் .அது எனக்கு இல்ல விட்டுல உல்லவங்கலுகு.நான் வாங்குன கொல்லு மீதி இருந்து சொ அத விட்டுல இருகுரவருகு பன்னுனென்

ரொம்ப நல்ல விஷயம் சாப்பிடாதிங்க இனிமே . பாவம் பாப்பா

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Illa abi sapda matten.