கம்பால் ஹொலி ஸ்ப்ரிக்ஸ் (Gumball Holly Sprigs)

தேதி: December 23, 2014

5
Average: 5 (3 votes)

 

கம்பால்ஸ் (Gumballs) - சிவப்பு, பச்சை நிறங்களில்
காம்புகளுடனான செயற்கை இலைகள்
செலோஃபேன் ஷீட் (நிறமற்றது)
ரிப்பன்கள்
டாய்லி (Doily)
ப்ளெய்ன் நெய்ல் பாலிஷ்
செலோடேப்
கத்தரிக்கோல்
ட்விஸ்டீஸ்
மெல்லிய கம்பி
ஃப்ளோரல் டேப் (பச்சை)
குறடு

 

தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இலைகளைக் காம்போடு தனித்தனியாக வெட்டி வைக்கவும்.
ஒரு இலையை எடுத்து அதன் ஒரு பக்கத்தை இவ்வாறு வெட்டிக் கொள்ளவும்.
பிறகு அதை திருப்பிப் பிடித்து மறுபக்கமும் இதே போல வெட்டிக் கொண்டால் ஹொலி இலை வடிவம் கிடைக்கும்.
மிட்டாய்களை எண்ணிக் கொண்டு, அதே எண்ணிக்கையில் இலைகளைத் தயார் செய்து கொள்ளவும். (இலைகளின் வெட்டிய ஓரங்களில் மெல்லிதாக ப்ளெய்ன் நெய்ல் பாலிஷ் தடவிவிட்டால் நூல் பிரியாது).
செலோஃபேன் ஷீட்டை மிட்டாய்க்கு அளவான துண்டுகளாக (கிட்டத்தட்ட 8 செ.மீ x 12 செ.மீ என்ற அளவில்) வெட்டி எடுத்துக் கொள்ளவும். மிட்டாய்க்கு ஒரு துண்டு வீதம் தேவைப்படும்.
வெட்டி எடுத்த செலோஃபேன் ஷீட்டின் நடுவில் மிட்டாயை வைத்துச் சுற்றி இறுக்கமாக முறுக்கிவிட்டு, ட்விஸ்டியால் கட்டிக் கொள்ளவும்.
படத்தில் காட்டியுள்ள விதமாக, ட்விஸ்டியைக் கொண்டு இறுக்கமாச் சுற்றி வைக்கவும். தேவைக்கு மேல் உள்ள செலோஃபேனை வெட்டி நீக்கவும்.
பிறகு பச்சை நிற கம் டேப்பால் இப்படிக் காம்பு போலச் சுற்றி வைக்கவும்.
விரும்பியபடி அனைத்தும் சிவப்பாகவோ அல்லது சிவப்பும் பச்சையும் கலந்தோ, மூன்று மிட்டாய்களையும் மூன்று இலைகளையும் ஒன்றாகப் பிடித்து, கம்பியால் இறுகக் கட்டவும்.
பிறகு கம்பியை மறைத்து, அதன் மீது பச்சை நிற கம் டேப்பைச் சுற்றிவிடவும்.
வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் அழகாக ஒரு போவ் (Bow) கட்டிவிடவும். சிறுவர் க்றிஸ்மஸ் விழாக்களில் இந்த மிட்டாய்ச் செண்டுகளை தனித்தனியாக அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.
சிறிய டாய்லி ஒன்றை அழுத்தாமல் பாதியாக மடித்து நடுவில் ஒரு செ.மீ அளவுக்கு ஒரு கோடு வெட்டவும். மறுபக்கம் மடித்துப் பிடித்து குறுக்காக இன்னொரு கோடு வெட்டவும். + வடிவத் துளை ஒன்று கிடைக்கும்.
அதன் வழியே ஹொலி செண்டு ஒன்றை நுழைக்கவும்.
டாய்லியின் பின்புறமாக ஹொலி செண்டைச் சேர்த்துப் பிடித்து இறுக்கமாக செலோடேப் கொண்டு ஒட்டிவிடவும். டாய்லிக்கு அளவாக சற்றுப் பெரிதாக ஒரு போவ் (Bow) கட்டிவிட்டால் உணவு மேசையில் ஒவ்வொரு தட்டிற்கருகிலும் ஒரு சிறு செண்டு வைத்து அலங்கரிக்கலாம்.
ஒரு சிறிய தட்டின் நடுவே மெழுகுவர்த்தியொன்றை வைத்து சுற்றிலும் டாய்லி, ரிப்பன் எதுவும் இல்லாமல் இந்தச் செண்டுகளை வைத்துவிட்டால் உணவு மேசை நடுவிற்கு அருமையான அலங்காரம் கிடைக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இமா, ரொம்ப‌ ஈசியான‌ குறிப்பு.
குட்டீசுக்கு கொடுத்தால் இந்த‌ மிட்டாய் கொத்து ரொம்பவே பிடிக்கும்.
கடைசி படம் அழகோ அழகு. வெள்ளை நிறத் தட்டில் சிவந்த‌ செர்ர்ரி பழம் மாதிரி இருக்கு. வெள்ளை மெழுகுவர்த்தி வச்சா எப்படி இருக்கும்??:)
டேபிள் டெகரேஷனுக்கு உங்களை மிஞ்ச‌ ஆளில்லை.:)

ரொம்ப அழகா இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி நிகிலா & வனி. :-)

//வெள்ளை மெழுகுவர்த்தி// இந்த சிவப்பு மெழுகுவர்த்தி ஒரு கிஃப்ட். மகனோட ஃப்ரெண்ட் எனக்குக் கொடுத்தது. அதனால ஸ்பெஷல். :-) அடுத்த வருஷம் வெள்ளை வைச்சுருறேன். //செர்ர்ரி பழம் மாதிரி// செர்ரி இலை வேற மாதிரி இருக்கும். இது ஹொலி.

//மிட்டாய்க் கொத்து// பெரியவங்க எல்லோருக்குமே பிடிச்சு இருந்துது. டின்னர் முடிஞ்சு கிளம்பும் போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு கொத்து கைல கொடுத்து வழியனுப்பி வைச்சேன். முன்னால டேபிள் டெகரேஷனா பார்க்கும் போது நான் இப்படிப் பண்ணக் கூடும் என்று யாருக்கும் தோணல. :-) சர்ப்ரைஸா இருந்துது. வர வருஷம் இதை நிச்சயம் எதிர்பார்ப்பாங்க. இனி எங்க வீட்டு க்றிஸ்மஸ் ட்ராடிஷன்ல இதுவும் சேரப் போகுது. :-)

செபா, குட்டிப் பொண்ணுங்க இரண்டு பேருக்கு சட்டைல ப்ரோச் போல குத்தி விட்டிருந்தாங்க. அழகா இருந்துது.

‍- இமா க்றிஸ்

எனக்கு இந்த‌ மாதிரி டெகரேஷன்னா ரொம்ப‌ ஆர்வம் இமா. உங்க‌ உலகத்தி னுள் நுழைந்தால் இவற்றை ஆர்வமுடன் ரசிப்பேன்.
ஆனா, எனக்கு எல்லா பொருளும் கிடைப்பதில்லை. கிடைப்பதை வைத்து செய்ய‌ முயற்சிப்பேன்.
முதன்முதலா ஒரு கைவினை குறிப்பை புக்மார்க் பண்ணுறேன். நன்றி இமா ரொம்ப‌ பிடிச்சிருக்கு:)

அழகாக இருக்கிறது. :-)