தேதி: December 24, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உளுத்தம் பருப்பு - 250 கிராம்
சீனி - ஒரு கப்
ரெடிமேட் தேங்காய் பால் - ஒரு டின்
ஏலக்காய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உளுந்தை சில மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்தில் அரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். ரெடிமேட் தேங்காய்ப் பாலில் பொடித்த ஏலக்காய் மற்றும் சீனி சேர்த்து கலந்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள உளுந்து மாவை கரண்டியால் எடுத்து எண்ணெயில் ஊற்றி பொரிக்கவும்.

பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து, தேங்காய் பாலில் போட்டு ஊற வைத்துப் பரிமாறவும். தேங்காய் பால் வாசனையுடன் சுவையான உளுந்து அல்கா பணியாரம் ரெடி.

எனக்கு ப்ரெஷ் தேங்காய் கிடைக்காததால், ரெடிமேட் தேங்காய்ப் பால் உபயோகித்துள்ளேன். ரெடிமேட் தேங்காய்ப் பால் பிடிக்காதவர்கள் 2 கப் தேங்காய் துருவல் எடுத்து, நன்கு அரைத்து முதல் பால் எடுத்து உபயோகிக்கலாம்,
இனிப்பு அவரவர் விருப்பம் போல சேர்த்துக் கொள்ளவும்.
Comments
நன்றிகள் பல..
குறிப்பினை கொடுத்த எங்கள் அறுசுவை டீமிற்க்கு எனது நன்றிகள்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
வாழ்த்துக்கள். கலக்கலா இருக்கு எல்லா குறிப்பும். வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.
எல்லாம் சில காலம்.....
ஹேய் குயின்
வாழ்த்துக்கள் கிச்சன் குயின் :) இரண்டாவது முறை மகுடம்... எப்படி ஃபீல் பண்றீங்க?? இண்டெர்வியூ எடுக்கறேன்... ;) உங்களை விட உங்க மகளை தான் கேட்கணும்.
அல்கா பணியாரத்தை அலேக்கா எடுத்து கொடுங்க... நானே சாப்பிட்டுக்கறேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாலநாயகி
உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப தேங்ஸ் மச்சி..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
வனி............
உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி..
//இரண்டாவது முறை மகுடம்... எப்படி ஃபீல் பண்றீங்க?? இண்டெர்வியூ எடுக்கறேன்... ;) // சுமி ரொம்ப ஹேப்பி வனி.. கிச்சன் குயின்னால எனக்கு மகுடம் மட்டும் இல்ல, கூட்டாஞ்சோறுல முதன் முறையா ஒரு ஸ்டாரும் கிடைக்க போகுது, ..:) =D நீங்களும் இதற்கு காரணம் வனி... தேங்ஸ் பார் ஆல்...:)
//உங்களை விட உங்க மகளை தான் கேட்கணும்.// அறுசுவையில அக்கா தம்பி போட்டோ வந்துடுச்சாம், மேடம் சோ ஹேப்பி, நொடிக்கு ஒரு தரம் இரண்டு பேரும் டேப்ல மசாலா லெஸி குறிப்பை ஓப்பன் செய்து செய்து போட்டோவ பார்த்துட்டு பூரிச்சு கிடக்கிறாங்க..:) ..;)
//அல்கா பணியாரத்தை அலேக்கா எடுத்து கொடுங்க... நானே சாப்பிட்டுக்கறேன்// வனிக்கு இல்லாததா. எடுத்துக்கோங்க.. நன்றி வனி..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
அல்கா பணியாரம் அமர்க்களமா இருக்கே ;)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவா..
எங்க அண்னாக்கு செய்து கொடுத்துட்டு, அவர் என்ன சொன்னார்ன்னு சொல்லுங்க சுவா..:0
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....