கேழ்வரகு பகோடா

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேழ்வரகுமாவு - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 6
இஞ்சி - ஒரு துண்டு
கருவேப்பிலை - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் லிட்டர்


 

ஒரு பத்திரத்தில் கேழ்வரகு மாவை எடுத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை இவைகளைப் பொடியாக நறுக்கி கேழ்வரகு மாவில் போடவும்.அதில் உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
சிறிது அளவு தண்ணீர் விட்டு மாவு உதிரும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பிசைந்த மாவை உதிர்த்து போட வேண்டும்.
நன்றாக வெந்ததும் எடுக்கவும். இது சத்து மிகுந்தது. மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது.


மேலும் சில குறிப்புகள்