பத்தியக் கஞ்சி

தேதி: December 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சீதாலெட்சுமி அவர்களின் பத்தியக் கஞ்சி குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சீதாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

புழுங்கல் அரிசி - கால் கப்
பாசிப்பயறு - 3 மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - பாதி
பூண்டு - 2 பற்கள்
மோர் - 1 - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு


 

பாசிப்பயறையும் வெந்தயத்தையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும். புழுங்கல் அரிசியைக் களைந்து, குழைவாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த பாசிப்பயறையும் வெந்தயத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
பிறகு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி, வெங்காயம், பூண்டு, வேக வைத்த பாசிப்பயறு, வெந்தயம் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
வெந்ததும் அதனுடன் குழைவாக வடித்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி ஆறவைக்கவும்.
ஆறியதும் மோர் கலந்து, தேவையெனில் மேலும் சிறிது உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

வயிற்று வலி, வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு, இந்தக் கஞ்சி மிகச் சிறப்பான உணவாகும். காலையில் டிஃபனுக்கு பதிலாக, இந்தக் கஞ்சியைக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்குக் குடித்தால், வயிற்று வலி மற்றும் புண் குணமாகும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய சீதா அவர்களுக்கும் நன்றி..

என்றும் அன்புடன்,
கவிதா