பேகன் பர்த்தா

தேதி: December 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. M. சீதா மோகன் அவர்களின் பேகன் பர்த்தா குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சீதா அவர்களுக்கு நன்றிகள்.

 

பெரிய கத்தரிக்காய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 4
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புதினா, கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப
வெங்காய விதை / கலோஞ்சி, சீரகம் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

கத்தரிக்காயைப் பாதியாக நறுக்கி அவனில் ப்ரோயில் செய்து குழையாமல் எடுத்து வைக்கவும். (தணலில் சுட்டும் எடுக்கலாம்). வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லித் தழையை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காய விதை / கலோஞ்சி, சீரகம், புதினா தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தணலில் வாட்டிய கத்தரிக்காயை மசித்து விட்டு சேர்த்து, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்கு மசாலாவுடன் கலந்து வந்ததும், கரம் மசாலா தூவி கிளறி இறக்கவும்.
சுவையான பேகன் பர்த்தா தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

நீர்க்க வேண்டுமெனில் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும்.

கரம் மசாலா செய்முறைக்கான லின்க் : <a href="/tamil/node/25684"> கரம் மசாலா பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் கத்தரிக்காய் டிஷ். இது சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும். அருமையான‌ டிஷ்.

எல்லாம் சில‌ காலம்.....

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய சீதா அவர்களுக்கும் நன்றி..

பாலா
வாழ்த்திற்கும்,வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா