தேதி: December 26, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வனிதா அவர்களின் ஸ்ரீகண்ட் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.
கெட்டி தயிர் - 2 கப்
சர்க்கரை - தேவைக்கேற்ப
பால் - ஒரு மேசைக்கரண்டி
குங்குமப்பூ - சிறிது
ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் தூள் - ஒரு சிட்டிகை
பாதாம், பிஸ்தா - சிறிது
தயிரைத் துணியில் கட்டி 6 - 8 மணி நேரம் வடித்துவிட்டு, கெட்டி தயிராக எடுக்கவும்.

அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பிறகு பாலை தயிருடன் சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகள் தூவி பரிமாறவும்.

சுவையான ஸ்ரீகண்ட் தயார்.

தயிர் கெட்டியாக இருக்க வேண்டும். நீர் வடிக்காமல் உடனே பயன்படுத்த விரும்பினால் Greek Yogurt என்று கிடைப்பவற்றை பயன்படுத்தலாம். ஜாதிக்காய் தூள் அல்லது ஏலக்காய் தூள் எதாவது ஒன்று சேர்த்தாலும் போதுமானது.
Comments
Kitchen queen nithya ramesh
Kitchen queen nithya ramesh congrats
நித்யா
இன்றைய கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்புகள் எல்லாம் அருமை.மேலும் குறிப்புகள் வழங்க என் வாழ்த்துக்கள்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
நித்யா
ஆகா!! போன வாரம் என் குறிப்புகள் சிலவும் தேர்வாகி வெளியாகி இருப்பது மகிழ்ச்சியா இருக்குங்க. படங்கள் அத்தனை அழகா போட்டிருக்கீங்க. பளிச்சுன்னு, கலர்ஃபுல்லா இருக்குங்க. மகுடம் சூடியமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் :) தொடர்ந்து இந்த பகுதியில் கலந்துகிட்டு அடிக்கடி முகப்பில் மகுடம் சூடனும்னு கேட்டுக்கறேன். என் குறிப்பும் ஒன்னு என்பது இன்னும் மகிழ்ச்சியா இருக்கு... மீண்டும் நன்றி நித்யா :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா