ஃபிஷ் ஃபிங்கர்ஸ்

தேதி: December 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுபா ஜெயபிரகாஷ் அவர்களின் ஃபிஷ் ஃபிங்கர்ஸ் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுபா அவர்களுக்கு நன்றிகள்.

 

வஞ்சிரம் / வௌவால் மீன் - கால் கிலோ
மைதா மாவு - 3 மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
ப்ரெட் / ரஸ்க் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


 

மீன் துண்டுகளைச் சுத்தம் செய்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் தடவி வைக்கவும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் விடும்.
பிறகு தண்ணீரை வடித்துவிட்டு மீன் துண்டுகளை 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் விரல் நீளத்தில் துண்டுகளாக்கி கொள்ளவும்.
மைதா மாவுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
மீன் துண்டுகளை மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து, ரஸ்க் தூளில் பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
டேஸ்டி ஃபிஷ் ஃபிங்கர்ஸ் ரெடி. சாஸுடன் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நித்யா ஃபிஷ் ஃபிங்கர்ஸ் சூப்பர். நீங்க செய்திருக்கும் மீன் வஞ்சிரமா இல்லை வௌவ்வாலா?? இங்கே கொஞ்சம் பார்சல்..இது கெட்டு போய் இருக்கும். சூடா செய்து அனுப்புங்க.. ஒகே வா

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஃபிஷ் ஃபிங்கர்ஸ் சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்..

Enakku fish finger na rombaaaaaaaa pidikum,athuvum ethanudan mayonnaise erunthal superrrrrr.

kandippa etha try panren

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar