தேதி: December 26, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தளிகா அவர்களின் பேபி வெனிலா புட்டிங் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தளிகா அவர்களுக்கு நன்றிகள்.
பசும் பால் - ஒரு கப்
வறுத்த அரிசி மாவு - 2 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு சொட்டு (விரும்பினால்)
பொடித்த வெல்லம் - அரை தேக்கரண்டி
தேன் - சிறிது
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

அரிசி மாவில் 2 தேக்கரண்டி பால் விட்டு கரைத்து வைக்கவும். மீதமுள்ள பாலைக் கொதிக்க வைக்கவும்.

கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள அரிசி மாவு மற்றும் வெல்லப் பொடி சேர்த்து, குறைந்த தீயில் கிளறிக் கொண்டே 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். (அப்பொழுது தான் அரிசி மாவு வேகும்).

பிறகு தீயை அணைத்து விட்டு ஆறிவிட்டு, எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

குழந்தைகளுக்கான வெனிலா புட்டிங் தயார். தேன் சேர்த்துக் கலந்து குழந்தைக்கு ஊட்டிவிடலாம்.

6 மாதத்திற்கு மேலுள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Comments
nithyaramash
கிச்சன் குயின்க்கு வாழ்த்துக்கள் . எல்லா ரெசிபியும் சூப்பரா இருக்கு.
Be simple be sample