தக்காளி-இஞ்சி கொத்சு

தேதி: December 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நித்யா கோபால் அவர்களின் தக்காளி-இஞ்சி கொத்சு குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

பெரிய தக்காளி - 4
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
மிளகாய்த் துள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


 

தக்காளியை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். (தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்). இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
2 நிமிடங்கள் கழித்து தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
10 நிமிடங்கள் சிம்மில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான தக்காளி இஞ்சி கொத்சு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நித்யா சூப்பர்.. முகப்பில் உங்கள் படங்கள் மின்னுக்கின்றன.. அனைத்து குறிப்புகளும் சூப்பர்ப்பா.. ஒவ்வொரு படமும் மிக அழகாக உள்ளது. இன்றைய கிச்சன் குயின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வாழ்த்துக்கள் கிட்சன் குயின் நித்யா. அருமையா இருக்கு எல்லாமே.

எல்லாம் சில‌ காலம்.....

இந்த தொக்கு நேற்று செய்தேன் நன்றாக இருந்து

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

இந்த தொக்கு நேற்று செய்தேன் நன்றாக இருந்து

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!