ஜவ்வரிசி புலாவ்

தேதி: December 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சு. பிரியதர்ஷினி அவர்களின் ஜவ்வரிசி புலாவ் என்ற குறிப்பு , விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய பிரியதர்ஷினி அவர்களுக்கு நன்றிகள்.

 

நைலான் ஜவ்வரிசி - 250 கிராம்
பாசிப்பருப்பு - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 5
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
பச்சை மிளகாய் - 5
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைக்கவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
ஜவ்வரிசியுடன் மஞ்சள் தூள் கலந்து மூன்று மணி நேரம் தண்ணீரில் முழ்கும் படி ஊற வைக்க வேண்டும்.
பாசிப்பருப்பை அரை வேக்காடு வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வதங்கிய பிறகு ஊறிய ஜவ்வரிசி, வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் உப்பு போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.
கடைசியாக தேங்காய்த் துருவல் போட்டு கிளறி இறக்கவும்.
எளிதில் செய்யக்கூடிய சுவையான ஜவ்வரிசி புலாவ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான‌ ஜவ்வரிசி புலாவ். செய்யறதுக்கும் சுலபமா இருக்கு.அந்த‌ கடைசி பிளேட் பார்க்கவே அழகு.வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப‌ நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் கிட்சன் குயின். உங்க‌ படம் பார்த்து இறால் ஜவ்வரிசி புலாவ்னு நினச்சிட்டேன். உள்ள‌ வந்து பாத்தா அது முந்திரி பருப்பு. கலக்கலா இருக்கு. சூப்பர்ப். வாழ்த்துக்கள்.

எல்லாம் சில‌ காலம்.....

ரொம்ப நன்றி சுமி. உங்கள மாதிரி எக்ஸ்பெர்ட் வாழ்த்துகளுக்கு நன்றி .

அன்புடன்
பாரதி வெங்கட்

நன்றி பாலநாயகி. இப்படி அடுத்தவங்க குறிப்பு பார்த்து பண்ணுன தான் நான் எல்லாம் கிச்சன் குய்ன் ஆக முடியும். ஏதோ என்னோட முதல் முயற்சி இது .

அன்புடன்
பாரதி வெங்கட்

அன்பு சகோதரிக்கு,

உங்களுடைய‌ ஜிமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்குமோ என்ற‌ சந்தேகம் உள்ளது. அதில் இருந்து Spam mails வருவதால் இந்த‌ சந்தேகம் எழுந்துள்ளது. இதை உறுதி செய்துகொள்ளும் வரை அந்த‌ மின்னஞ்சல் முகவரியில் உங்களை தொடர்புகொள்ள‌ வேண்டாம் என்று எண்ணி, இங்கே இதனை தெரிவிக்கின்றேன். உங்களுடைய‌ அந்த‌ அக்கவுண்ட் ஆக்டிவாக‌ இருக்கின்றதா? முடிந்தால் உங்களது பாஸ்வேர்டை உடனடியாக‌ மாற்றுங்கள். அதன் பிறகு ஒரு டெஸ்ட் மெயில் ஒன்றை எனக்கு அனுப்பி வையுங்கள். ஒருவேளை account hack செய்யப்பட்டிருந்தால் உங்களிடம் இருந்து வரும் எந்த‌ மின்னஞ்சலை திறந்தாலும் எங்களுக்கு பிரச்சனைகள் வரக்கூடிய‌ வாய்ப்புகள் உள்ளன‌. தயவுசெய்து இதனை உடனே கவனிக்கவும்.

நான் எனது ஜிமெயில் பாஸ்வேர்டை இப்பொழுது மாற்றி விட்டு உங்களுக்கு டெஸ்ட் மெயில் அனுப்பி இருக்கிறேன். வேறேதும் பிரச்சனை என்றால் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரிவிக்கவும்.

அன்புடன்
பாரதி வெங்கட்