போப்ரா ரைஸ்

தேதி: December 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

திருமதி. எஸ்.ஜெயலட்சுமி அவர்களின் போப்ரா ரைஸ் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய ஜெயலட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

சாதம் - 3 கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 10
பூண்டு - ஒரு பல்
பரங்கிக்காய் - 2 கீற்று
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பில்லை - ஒரு கொத்து


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைக்கவும் வெங்காயம், பூண்டு இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பரங்கிக்காயைக் தோல் சீவி விட்டு துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், முந்திரி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சிவக்க வதக்கவும்.
பிறகு பரங்கிக்காய் துருவல் போட்டு வதக்கவும். அதில் உள்ள ஈரப்பதம் வற்றியவுடன், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
2 நிமிடத்திற்கு பிறகு இறக்கிவிட்டு, சூட்டோடு ஆறிய சாதத்தில் கலந்துவிடவும். கடைசியில் நெய் ஊற்றி நன்கு கிளறிவிடவும்.
சுவையான போப்ரா ரைஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாரதி உங்கள் அனைத்து குறிப்புகளும் வித்தியாசமான குறிப்புகள் நீங்கள் செய்திருப்பது அனைத்தும் அருமை.. படங்கள் அனைத்து சூப்பரா இருக்கு.. இன்றைய கிச்சன் ராணி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வாழ்த்துக்கள் கிட்சன் குயின் பாரதி. எல்லாமே அருமை. ரொம்ப‌ நல்லா செய்து இருக்கீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

ரொம்ப ரொம்ப நன்றி ரேவதி.

நன்றி பாலநாயகி.

நான் ரொம்ப பயனடைதிருகிறேன் அறுசுவையால். ஏதோ புதுசா கொடுக்க முடியலைனாலும் இந்த மாதிரி ஒரு சான்ஸ் கொடுத்து என்னையும் குறிப்பு அனுப்ப வைத்த அட்மின் அண்ணாவுக்கும், வனி க்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

அன்புடன்
பாரதி வெங்கட்

வாழ்த்துக்கள் பாரதி
அனைத்தும் அருமை..

என்றும் அன்புடன்,
கவிதா

வாழ்த்துகளுக்கு நன்றி கவிதா.

அன்புடன்
பாரதி வெங்கட்

வாவ் வாவ்... எல்லா குறிப்பும் வித்தியாசமா சூஸ் பண்ணிருக்கீங்க. நண்டு கட்லட் எல்லாம் பண்ன முடியும்னு எனக்கு தெரியவே தெரியாது. இந்த ரைஸ் குறிப்பும் பேரு ரொம்ப டிஃபரண்ட். சூப்பருங்க எல்லாமே. மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :) தொடர்ந்து கலக்க வேணும் இந்த பகுதியில்னு அன்போடு கேட்டுக்கறேன். படங்களும் பழக்கமான ஒருவருடைய குறிப்பு போல அசத்தலா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னைக்கு தான் உங்க‌ பின்னோட்டத்தை பார்கிறேன். உங்களால தான் நான் போட்டியில் சேர முடிந்தது.உங்களோட இந்த முயற்சிக்கு முதல்ல நன்றி அண்ட் பாராட்டுகள். இங்க உள்ள குறிப்பு எல்லாம் போட்டோ க்கு மட்டும் இல்லாம சாப்பிடவும் ரொம்ப நல்லா இருந்தது. டிபரென்ட் ரெசிப்பி கிடைச்சிட்டு. இன்னும் நிறைய பண்ணனும்னு நினைக்கிறன் டைம் தான் கிடைக்க மாட்டுது. கண்டிப்பா அடுத்த முறை இன்னும் நிறைய ரெசிபி ட்ரை பண்றேன். உங்க குழந்தைங்க பேரு யாழினி, சிவகுமரன் ன்னு பழைய போஸ்ட்லேருந்து தெரிஞ்சிகிட்டேன். உங்களுக்கும், உங்க குட்டீஸ்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

அன்புடன்
பாரதி வெங்கட்