மக்ரோனி சீஸ் & பாயில்டு பொட்டேட்டோ

தேதி: December 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட அம்மு அவர்கள் வழங்கியுள்ள மேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொட்டேடோ என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய அம்மு அவர்களுக்கு நன்றிகள்.

 

மக்ரோனி - ஒரு கப்
மொசரெல்லா சீஸ் - அரை கப்
பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று
மைதா மாவு - ஒரு தேக்கரண்டி
பால் - ஒரு கப்
சீரகப் பொடி - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத் தூள் - 3 மேசைக்கரண்டி
வெங்காயம் - கால் கப்
தக்காளி - கால் கப்
பூண்டு - 9 பற்கள்
பட்டை - ஒன்று
ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மக்ரோனியைப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு சொட்டு எண்ணெய் விட்டு 6 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கைத் தோல் சீவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு வெந்ததும் சரிபாதியாக வெட்டி வைக்கவும்.
கடாயில் ஆலிவ் ஆயில் மற்றும் பட்டர் விட்டு காய்ந்ததும், வெங்காயம் போட்டு வதக்கி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும், அதில் பட்டையைப் போட்டுப் பொரித்து, கலவையிலிருந்து பட்டையை தனியாக எடுத்துவிடவும்.
பிறகு தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, சீஸ் சேர்த்து லேசாக உருகும் வரை கிளறவும்.
சீஸ் உருக ஆரம்பித்ததும் மிளகுத் தூள் மற்றும் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
பால் நன்கு கொதித்து பாதி அளவிற்கு வற்றியதும், மைதா மாவைப் போட்டு கட்டிகளாகிவிடாமல் நீர் தெளித்து இரண்டு நொடிகள் கிளறவும்.
பிறகு மக்ரோனி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கைப் போட்டு 2 நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
இறக்கியவுடன் சீரகப் பொடி சேர்த்து கிளறவும்.
ரிச் & டேஸ்டி மக்ரோனி சீஸ் & பாயில்டு பொட்டேட்டோ ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Today kitchen queen bharathivenkat congrats

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். எல்லா குறிப்பும் அருமை, மேலும் குறிப்புகள் வழங்க‌ என் வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துகளுக்கு நன்றி நிஷா மேம்.

ரொம்ப நன்றி சுமி.

அன்புடன்
பாரதி வெங்கட்