மொஹல் சிக்கன் கறி

தேதி: December 30, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆயிஷா பேகம் அவர்களின் மொஹல் சிக்கன் கறி என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆயிஷா பேகம் அவர்களுக்கு நன்றிகள்.

 

கொத்திய கோழிக்கறி - அரைக் கிலோ
பச்சை மிளகாய் - 6
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள்
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
நெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு


 

இஞ்சி, பூண்டினை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு நறுக்கிய இஞ்சி பூண்டினைப் போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அத்துடன் கொத்திய கோழிக்கறியினை சேர்த்து, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டி மிதமான தீயில் நன்கு வேகவிடவும்.
கறி முக்கால் பதம் வெந்த நிலையில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தீயை சற்று அதிகமாக்கி நெய் பிரியும் வரை வதக்கவும்.
அதன் பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, கறி நன்கு வேகும் வரை வைத்திருந்து வெந்தவுடன் இறக்கவும்.
சுவையான மொஹல் சிக்கன் கறி ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பரோட்டாவுடன் சேர்த்துச் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மொஹல் சிக்கன் கறி நல்லா வந்திருக்கு. கடைசி படம் ரொம்ப‌ அழகு.வாழ்த்துக்கள் பாக்யா.

அன்புடன்
பாரதி வெங்கட்

பாக்யா செல்லம். இன்றைய கிச்சன் குயின் பாக்யா வாழ்த்துக்கள். சிக்கன் சூப்பரா இருக்கு

Be simple be sample

மிக்க‌ நன்றி.. சுவையிலும் மொகல் சிக்கன் கறி மிக‌ அருமை..

"எல்லாம் நன்மைக்கே"