மஷ்ரூம் மிளகு வறுவல்

தேதி: December 30, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் மஷ்ரூம் மிளகு வறுவல் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

மஷ்ரூம் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மஷ்ரூமை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கி, அதனுடன் மஷ்ரூமைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள் மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்றாகக் கிளறி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பிரட்டிவிட்டு கொதிக்கவிடவும். கலவை திக்கானதும் ஒரு முறை கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான மஷ்ரூம் மிளகு வறுவல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய கிச்சன் குயின் பாக்யாவிற்கு என் வாழ்த்துகள்.. உங்கள் அனைத்து குறிப்புகளும் சூப்பரா இருக்கு. தொடர்ந்து நிறைய குறிப்புகள் உங்களிடமிருந்து எதிர்பார்கிறேன்.. வாழ்த்துகள் பாக்யா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்புகளும் படங்களும் எல்லாமே சூப்பர். மேலும் குறிப்புகள் வழங்க‌ என் வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்து கூறிய‌ ரேவதி, சுமிக்கு மிக்க‌ நன்றி.. மிகவும் சுலபமான‌ ரெசிபி இது...நீங்களும் செய்து பாருங்கள்..

"எல்லாம் நன்மைக்கே"