ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி

தேதி: December 30, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்களின் ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.

 

ஸ்ட்ராபெர்ரி - 5
வாழைப்பழம் - பாதி
தயிர் - ஒரு கப் (அ) ஒன்றரை கப்
சர்க்கரை - தேவைக்கு
உப்பு - சிட்டிகை


 

முதலில் தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பழங்களை ப்ளெண்டரில் போட்டு அடிக்கவும். (சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்க்கவும்).
அதனை வடிகட்டி தயிர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து ஸாப்ட் ஆகும் வரை மீண்டும் அடிக்கவும்.
சுவையான ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி ரெடி.

குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்கள், இந்த லஸ்ஸியில் சற்று கூடுதலாக உப்பு சேர்த்துப் பருகினால் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஸ்ட்ராபெர்ரி பனானா லஸ்ஸி பார்க்கும் போதே ரொம்ப சூப்பரா இருக்கு ஃபைனல் போட்டோஸ் சூப்பர் கண்டிப்பா செய்து பார்க்கிறேன். முதன் முறையாக கிச்சன் குயினாக மகுடம் சூடியிருக்கும் பாக்யாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோல் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.

பார்க்கறதுக்கே சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்து குடிக்கிறோம். வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

இன்றைய கிச்சன் குயின் பாக்யாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :) லஸ்ஸி பாக்கவே சூப்பரா இருக்குங்க.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கிச்சன் குயினுக்கு வாழ்த்துகள்!
எல்லா குறிப்புகளுமே அருமையாக‌ இருக்கு.
படங்கள் பளிச்... பளிச்...
(நீண்ட‌ இடைவெளிக்குப்பின் மீண்டும் உங்க‌ குறிப்புகள் முகப்பில் ஜொலிக்கிறது சூப்பருங்க‌)
தொடர்ந்து கலக்குங்க‌...

மிக்க‌ நன்றி.. செண்பகா, சுவர்ணா,பால‌ நாயகி, vibgy அனைவருக்கும் நன்றி.. கிச்சன் குயின்‍ ஆக‌ என்னை தேர்ந்து எடுத்த‌ அறுசுவை அன்ட் டீமிற்கும் நன்றி..
இன்னும் நிறைய‌ குறிப்புகளோடு வருகிறேன்.. :)

"எல்லாம் நன்மைக்கே"

உங்க ஃபோட்டோக்ராஃபி ஸ்கில் எனக்கு தெரியும்... ஆனா இந்த சாதாரண லஸ்ஸியை இம்புட்டு அழகா காட்ட முடியும்னு இப்ப தான் பார்க்குறேன். மகுடம் சூடியமைக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். :) நீங்க பங்கெடுப்பதே எனக்கு மகிழ்ச்சி... தொடர்ந்து பங்கெடுத்தா ரொம்ப சந்தோஷப்படுவேன் :) எல்லா குறிப்பும் அருமை... என் குறிப்பை தேர்வு செய்து இத்தனை அழகா படத்தோடு வெளியிட்டது இன்னும் பெரிய மகிழ்ச்சி :) நன்றி பாக்கியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா