கம்மல் அலர்ஜி

அனைவருக்கும் வணக்கம் எனது மகளுக்கு 5 வருடம் முன்பு காது குத்தியது. Sensitive ear rings மட்டுமே ஒத்து வருகிறது. ஒரு காதின் பின்புறம் சிறிய கொப்புளம் போன்ற இருக்கின்றது. டாக்டர் அதை உடைக்க வேண்டாம் என்று. கூறுகிறார். அந்த கொப்புளம் வடிய ஏதாவது வழி இருக்கா? தெரிந்தவர் சொன்னால் மிகப் பெரிய உதவியாக இருக்கும். நன்றி.

உடைக்காமல் அப்படியே விடுங்க. தானாக வற்றிவிடும்.

‍- இமா க்றிஸ்

காதின் பின்புறம் உள்ளதால் கொஞ்சம் நிம்மதி. கம்மல் போடாமல் அப்படியே விட வேண்டுமாங்க? ஆலோசனைக்கு நன்றி.

எனக்கு இது உண்டு :( ஒரு மணி நேரம் போதும் கவரிங் போட்டா, உடனே அரிப்பு எடுத்து புன்னாகிப்போகுது. ஆறி சரியாக 1 வாரம் 10 நாள் ஆகுது. டாக்டரை கேட்டப்போ காயம் ஆயிட்டா கம்மல் இல்லாம சில நாள் விட்டா சீக்கிரம் காயும்னு சொன்னார். அது போல கம்மல் போடாம இருக்குறது ஒன்னு தான் வழின்னும் சொல்லிட்டார். எனக்கு நீங்க சொன்ன மாதிரி சின்ன கொப்பலம் வந்தது... இப்ப காணொம்... எப்ப மறைஞ்சுதுன்னு எனக்கே தெரியல... உங்க பதிவை படிச்சுட்டு தொட்டு பார்த்தா காணோம் ;) நான் ரொம்ப காயமாயிட்டா தேங்காய் எண்ணெயில் நீபாசல்ஃப் பவுடர் குழைத்து பூசி விடுவேன். கொஞ்சம் சீக்கிரம் ஆறுவதாக தோண்றும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க சொல்வது போல் செய்து பார்கிறேன். ஆலோசனைக்கு நன்றி. இமாஅவர்களும் அதைதான் சொல்லி இருக்காங்க.

மேலும் சில பதிவுகள்