ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 1

தேதி: December 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மாவு - 6 1/2 (ஆறரை) கோப்பைகள் + மேலதிகமாக ஒரு கோப்பை
பட்டர் - 250 கிராம்
முட்டை - 2
பழுப்புச் சீனி - ஒரு கோப்பை (அழுத்தமாக நிரப்பிக் கொள்க)
சீனிப் பாணி (Treacle) - ஒன்றரை கோப்பை
இஞ்சித் தூள் - 4 தேக்கரண்டி
கறுவாத் தூள் - 4 தேக்கரண்டி
கிராம்புத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மிக்ஸ்டு ஸ்பைஸ் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி
தேவையான உபகரணங்கள்:
மிக்சர் - அடிக்கும், குழைக்கும் பாகங்களோடு
ஃப்ரீசர் பாக்ஸ் - 6
டெம்ப்லேட்டுக்கு :
தடித்த அட்டை
ஸ்கேல்
பென்சில்
கத்தரிக்கோல்


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முதலில் மாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து வைக்கவும்.
இவற்றுடன் இஞ்சித் தூள், கறுவாத் தூள், கிராம்புத் தூள், மிக்ஸ்ட் ஸ்பைஸ் மற்றும் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டைகளை அடித்து வைக்கவும்.
அத்துடன் சீனிப்பாணியைச் சேர்த்து அடித்துத் தனியாக வைக்கவும்.
கேக் அடிக்கும் பெரிய பாத்திரத்தில், பழுப்புச் சீனியையும் பட்டரையும் சேர்த்து மிருதுவாகும் வரை அடிக்கவும்.
அத்துடன் முட்டை, சீனிப்பாணிக் கலவையை ஊற்றி அடிக்கவும். (முழுவதும் கலந்தால் போதும். அதிகம் அடிக்க வேண்டியது இல்லை).
பிறகு மாவுக் கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து அடிக்கவும்.
நீர்த்தன்மை குறைவாகத் தெரிய ஆரம்பிக்கும் சமயம், மிக்சரிலிருந்து பீட்டிங்கிற்கான பாகங்களைக் கழற்றி, டோ ஹூக் (Dough Hook) மாட்டிக் கொண்டு குழைக்கவும்.
மாவுக் கலவை முழுவதையும் சேர்த்துக் குழைத்ததும் பாத்திரத்தில் ஒட்டியுள்ள அனைத்தையும் சுரண்டிச் சேர்த்து ஒரு பெரிய பந்தாகத் திரட்டி எடுக்கவும். (கைகளில் தாராளமாக மாவு தடவிக் கொள்ளவும். அல்லாவிட்டால் பிசுபிசுவென்று ஒட்டிக் கொள்ளும்).
கிடைப்பதை, மூன்று சம பாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும். மீண்டும் ஒவ்வொன்றையும் இரண்டாகப் பிரித்து ஆறு உருண்டைகளாகத் திரட்டி எடுக்கவும். ஒவ்வொன்றையும் தனித்தனியே ஃப்ரீசர் பாகில் போட்டு, சற்றுத் தட்டையாக அழுத்தி ப்ரிட்ஜில் வைக்கவும். (இது முதல் நாள் செய்ய வேண்டிய வேலை).
டெம்ப்லேட்டுக்கான அளவுகள் : வீட்டின் முகப்புப் பக்கத்திற்கான அளவு.
இது பக்கச் சுவருக்கான அளவு.
வீட்டின் கூரைக்கான அளவு இது.
புகை போக்கிப் பகுதிக்கான அளவுகள். (சரிவான பக்கம், வீட்டின் முகப்புப் பக்கத்திற்கான படத்திலுள்ள கூரைச் சரிவை ஒத்ததாக இருக்க வேண்டியது அவசியம்).

டெம்ப்லேட்டுக்காக கொடுத்துள்ள அளவுகளை அட்டையில் மாற்றி வரைந்து கொள்ளவும். மூலைகள் சரியாக 90° கோணம் இருக்க வேண்டும். துண்டுகள் ஒவ்வொன்றிலும் எத்தனை தேவையென்பதைக் குறித்து வைத்துக் கொண்டு, தனித் தனியே (ஒவ்வொன்றிலும் ஒரு துண்டு போதும்) வெட்டி வைக்கவும்.

இரண்டாவது பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30266"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 2 </a>

மூன்றாவது பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30267"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 3 </a>

கடைசி பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30268"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 4 </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Azagaa irukku veedu :) happy new year

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கேக் வீடு ரொம்ப‌ அழகு இமாம்மா.. இஞ்சி, கறுவாப்பட்டையெல்லாம் கேக்ல‌ போட்டு செய்யறது எனக்கு ரொம்ப‌ புதுசு.. அருமையான‌ விளக்கபடங்களோட‌ சொல்லி இருக்கீங்க‌.. வாழ்த்துக்கள் இமாம்மா.. என் இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மிக்க நன்றி வனி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். :-)

‍- இமா க்றிஸ்

//விளக்கபடங்களோட‌// இதுதான் கொஞ்சம் இடிபாடாக இருந்தது. எங்கே காமராவில் மாவை, ஐஸிங்கை கொட்டிருவேனோன்னு பயந்துட்டே எடுத்தேன். :-) நன்றி சுமி. மலரும் ஆண்டு உங்களுக்கும் இனிதாக அமைய என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்