ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 2

தேதி: December 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

குளிர வைத்த ஜிஞ்சர் ப்ரெட் மாக்கலவை
மாவு - ஒரு கோப்பை அளவு
டெம்ப்லேட்
பேக்கிங் பேப்பர்
ரோலிங் பின்
பேஸ்ட்ரி வீல்
நீளமான மெல்லிய கூரான கத்தி
ஜிஞ்சர் ப்ரெட் மனித வடிவ குக்கீ கட்டர்
பேக்கிங் ட்ரே
ஐஸிங் தயாரிக்க :
ஐஸிங் சீனி - 225 கிராம்
முட்டை - ஒன்று
லெமன் சாறு - அரை தேக்கரண்டி


 

ஐஸிங் தயார் செய்வதற்கு தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
முட்டையின் வெள்ளைக் கருவைத் தனியாகப் பிரித்தெடுத்து கையால் அடித்து எடுக்கவும்.
அடித்த முட்டையோடு கட்டிகளில்லாமல் சலித்த ஐஸிங் சீனியைச் சிறிது சிறிதாகக் கலந்து கொள்ளவும்.
இறுதியாக லெமன் சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும். இதனைப் பைப்பிங் பாகில் போட்டு விரும்பியபடி கேக்கையோ பிஸ்கட் வகைகளையோ ஐஸ் செய்யப் பயன்படுத்தலாம். காற்றோடு தொடர்பில் வந்ததும் ஐஸிங் மெதுவே இறுக ஆரம்பிக்கும்.
சமையலறை மேடையில் பேக்கிங் ட்ரே அளவுக்கு பேக்கிங் பேப்பர் விரித்து, அதன் மீது தாராளமாக மா பரப்பிக் கொள்ளவும். கைகளிலும் ரோலிங் பின்னிலும் நிறைய மா பூசவும். வேலை நடுவே தேவையான சமயம் மீண்டும் பூசத் தக்கதாக ஒரு கிண்ணத்தில் மா எடுத்து, அருகே தயாராக வைத்திருக்கவும். ஒரு பங்கு மாக் கலவையை மட்டும் ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து, சுற்றிலும் மா பூசிக் கொள்ளவும். கலவையை பேக்கிங் பேப்பரின் மேல் வைத்து, அதிகம் அழுத்தம் கொடுக்காமல் ரோலிங் பின்னால், 5 மில்லி மீட்டர் உயரம் வருமாறு தேய்க்கவும்.
டெம்ப்லேட் ஒன்றின் மேல் மெல்லிதாக மாவு தடவி, அதைத் தேய்த்து வைத்திருப்பதன் மேல் வைத்து, (அழுத்தாமல் பிடிக்கவும்) சுற்றிலும் பேஸ்ட்ரி ரோலரால் வெட்டிக் கொள்ளவும். (மீதியில் இடம் இருப்பதைப் பொறுத்து இன்னொரு துண்டு அல்லது ஜிஞ்சர் ப்ரெட் மனிதர்களை வெட்டிக் கொள்ளலாம்).
எந்த இரண்டு துண்டுகளையும் ஒட்டினாற் போல வைத்து வெட்ட வேண்டாம், படத்தில் தெரிவது போல நடுவில் இடைவெளி விட்டு வெட்டவும். சரிவான பக்கங்களில் இரண்டாவதை வெட்டும் போது, அட்டையைத் திருப்பிப் போட்டு வெட்ட வேண்டும்.
வெட்டிய பிறகு தேவையான வடிவம் குலைந்து போகாமல் கவனமாக மீதியை மட்டும் நீக்கவும். பேக்கிங் பேப்பரைக் கவனமாகத் தூக்கி பேக்கிங் ட்ரே மேல் வைக்கவும். மீதியை உடனுக்குடன் சேர்த்து உருட்டி, பையில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்துவிடவும். தேவையான போது பயன்படுத்தலாம்.
எப்பொழுதும், பேக் செய்யப் போகும் பகுதிகள் எதனையும் அசைக்காமல் மீதியை மட்டும் கவனமாக உரித்து நீக்கவும். சரியாக வெட்டுப்படாமலிருக்கும் இடங்களைக் கத்தியால் மீண்டும் மெல்லிதாகக் கீறிவிட்டு எடுக்கலாம்.
180°c யில் முற்சூடு செய்த அவனில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து ஆறவிடவும். பேக்கிங் ஷீட்டிலிருந்து பிரித்து எடுக்கச் சுலபமாக வராத இடங்களில், நீளமான கத்தி ஒன்றைக் கிடையாக பேக்கிங்கிற்கு அடியில் சொருகி, கவனமாகப் பிரித்துவிடவும். நன்றாக ஆறி இறுகும் வரை பேக்கிங் ஷீட்டிலேயே விட்டு வைக்கவும்.
மனித வடிவ குக்கீ கட்டரைக் கொண்டு தேவையான எண்ணிக்கையில் மனித வடிவில் வெட்டியெடுத்து பேக் செய்து எடுத்து ஆறவிடவும். எல்லாத் துண்டுகளையும் ஒரே சமயம் பேக் செய்யக் கிடைக்காது. விளிம்புகள் இல்லாத குக்கி ட்ரே பயன்படுத்துவது இந்த வேலைக்குச் சுலபம். பேக்கிங் பேப்பரை நேரடியாக அதன் மேல் வைத்து மேலே குறிப்பில் சொன்ன விதமாக வெட்டிக் கொள்ளலாம்.

முதல் பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30265"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 1 </a>

மூன்றாவது பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30267"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 3 </a>

கடைசி பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30268"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 4 </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டார்லிங் கேக் சூப்பரா இருக்கு. எனக்கும் ஒன்னு பார்சல் பண்ணுங்க‌. பாக்கற‌ அப்பவே சாப்டணும் போல‌ தோணுது. ஹேப்பி நியூ இயர் டியர்.

எல்லாம் சில‌ காலம்.....

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாலநாயகி. :-) உங்கள் கருத்துக்கு என் அன்பான நன்றிகள். //பார்சல்// சீக்கிரம் அனுப்பி வைக்கிறேன். :-)

ஸ்ட்ராபெரி ஜாம் குறிப்பின் கீழ் பாருங்க. அங்கு உங்களுக்காக ஒரு செய்தி காத்திருக்கிறது.

‍- இமா க்றிஸ்