கடலைப்பருப்பு பணியாரம்

தேதி: January 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா மாவு - 2 கப்
கடலைப்பருப்பு - 2 கப்
பொடித்த வெல்லம் - ஒன்றரை கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - 2 தேக்கரண்டி
நெய் அல்லது டால்டா - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

குக்கரில் கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, சிறது தண்ணீர் ஊற்றி, சற்று தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
அதனுடன் நெய்யைச் சேர்த்து கலந்து வைக்கவும்.
வேக வைத்த கடலைப்பருப்புடன் தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம், ஏலக்காய்ப் பொடி சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த பருப்புக் கலவையை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மைதா மாவுக் கலவையில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான கடலைப்பருப்பு பணியாரம் தயார். சூடாகப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கடலைப்பருப்பு பணியாரம் என்னை சுண்டி இழுக்குது சுவா, ஒரு பிளேட் பார்சல். படங்கள் அழகு. வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நான் சுகியம்ன்னு கேள்விபட்டிருகேன். சூப்பரா இருக்கு

Be simple be sample

எல்லா குறிப்புகளுமே அருமை . அழகா படம் எடுத்து அனுப்பிருக்கீங்க‌. ஐ லைக் வெரிமச்!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

சுமி மிக்க நன்றி.............:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவா அதேதான் இது ;) என்ன ஒவ்வொருத்தங்களும் ஒரு பேரு வச்சிக்கிறாங்க அம்புட்டுதான் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மெர்சி மிக்க நன்றிங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.