கோதுமை அடை

தேதி: January 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. எ. லீமா ரோஸ் அவர்களின் கோதுமை அடை குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லீமா ரோஸ் அவர்களுக்கு நன்றிகள்.

 

சம்பா கோதுமை - 200 கிராம்
கோதுமை மாவு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத் தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முருங்கைக் கீரை - கைப்பிடி அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 100 மில்லி


 

சம்பா கோதுமையை அரை லிட்டர் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு மற்றும் இஞ்சியைத் தட்டி வைக்கவும்.
ஊறிய சம்பா கோதுமையுடன், கோதுமை மாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதனுடன் மிளகாய்த் தூள், சோம்புத் தூள், இஞ்சி, பூண்டு, முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து அடை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானவுடன் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். ஓரத்திலும் நடுவிலும் அரை தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி வேகவிடவும். 2 நிமிடங்கள் கழித்து திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான கோதுமை அடை தயார். சட்னியுடன் பரிமாறவும்.

முருங்கைக் கீரைக்கு பதிலாகக் கறிவேப்பிலை போட்டுக் கொள்ளலாம். இத்துடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ஏற்ற சிற்றுண்டி இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய சமையல் ராணி சுவாக்கு என் வாழ்த்துகள்.. முகப்பு ரொம்ப பிரகாசமா ஜெலிக்குது.. சூப்பர் சுவா கலக்கல்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கோதுமை அடை பார்க்கவே கலர்புல்லா அழகா இருக்கு. விருப்ப‌ பட்டியலில் சேர்தாச்சு. கிச்சன் குயின்னுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
பாரதி வெங்கட்

கிச்சன் குயின் சுவாக்கு வாழ்த்துக்கள். ஊற வைத்த கோதுமை அரைக்க வேண்டாமா. அப்படியே வெந்துடுமா. சூப்பரா இருக்கு.

Be simple be sample

சுவா கோதுமை அடை சும்மா ரணகளமா இருக்கு..:) கலக்கல் ரெசிப்பி. வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்புகளை வெளியிட்ட அறுசுவை குழுவினற்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முதல் வாழ்த்துக்கு மிக்க நன்றிம்மா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாரதி வாழ்த்திற்க்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவா வாழ்த்துக்க மிக்க நன்றி :) கோதுமையை அரைக்க தேவையில்ல ரேவா அரைக்காம செய்தாதான் நல்லாருக்கும். கோதுமை ரவையை ஊரவச்சிடுறோம்ல அதனால சீக்கிறமா வெந்துடும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி கண்ணு மிக்க நன்றிங்கோ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

romba nalla irukku

உங்க‌ கோதுமை அடை செய்தேன். ரொம்ப‌ நல்லா இருந்தது. நல்ல சாஃப்ட்,வாசமா இருந்துச்சு. இன்னும் தொடருங்கள்.

அன்புடன்
பாரதி வெங்கட்

மிக்க நன்றிங்க .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி பாரதி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சம்பா கோதுமை ரவையா இல்லை முழு கோதுமையை ஊற வைக்கவா...

Receipa ah padikum pothu mulu kothumai endrey ninaichen .After ellarodaiya comments ah paditha pinbu kothumai ravai endru pourinthu konden inum enna mari niriya peruku doubts irukum sis,Sidela braketlaiyathu podungoo .Today nit try panitu feedback soluren

பெற்ற தாய் தந்தை உன்னை கைவிட்டாலும், நான் உன்னை கைவிடமாட்டேன்

Sis iniku nit dinner try panni en hubby ku kuduthen .Avaru sapitu pathutu A1111 ah irukunu nu sonnaru.Unga receipe super ah irrunthuchu athum nala roast ah vanthuchu thanx sis

பெற்ற தாய் தந்தை உன்னை கைவிட்டாலும், நான் உன்னை கைவிடமாட்டேன்