கேரட் பணியாரம்

தேதி: January 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கேரட் - 2
மைதா மாவு - ஒரு கப்
சீனி - அரை கப் (அ) சுவைக்கேற்ப
பால் / தண்ணீர் - சிறிதளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
தோல் சீவிய கேரட்டைச் சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு சிறிதளவு பால் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கேரட்டுடன் சீனி மற்றும் மைதா மாவு சேர்க்கவும்.
பிறகு அதனை கேக் மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவுக் கலவையை கையால் (அல்லது கரண்டியால்) சிறு உருண்டையாக உருட்டிப் போடவும். மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுலபமாகச் செய்யக்கூடிய, சுவையான கேரட் பணியாரம் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பணியாரம் சூப்பர். சிம்பிளா சூப்பரா இருக்கு. ஹெல்தியான‌ பனியாரம்

எல்லாம் சில‌ காலம்.....

மீண்டும் என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றிகள்..

பதிவிற்கும் வருகைக்கும் நன்றி..

பார்க்க, பனங்காய்ப் பலகாரம் போல இருக்கு தர்ஷா. :-) கட்டாயம் செய்துபார்க்கத்தான் வேண்டும்.

‍- இமா க்றிஸ்

பனங்காய் பலகாரம் போல தான். செய்து பாருங்க.

இது போல இப்ப தான் பார்க்குறேன், நல்லா வந்திருக்கு, அவசியம் செய்துட்டு சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தர்ஷா உங்க கேரட் பணியாரம் செய்தேன் ரொம்ப அருமயா இருந்தது சிறிது சோடாப்பும் நட்ஸ்சேர்த்து செய்தேன் அருமையா பணியாரம் குறிப்புக்கு நன்றி

நன்றி வனி அக்கா. செய்து பாருங்க. பிடிக்கும் என்று நினைக்கிறேன்

செய்து பார்த்து பின்னுட்டம் தந்ததுக்கு ரொம்ப நன்றி..