ஆலூ டிக்கியா

தேதி: January 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ராஜம் அவர்களின் ஆலூ டிக்கியா என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ராஜம் அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - 3
வாழைக்காய் - ஒன்று
நெய் - 50 கிராம்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
ரொட்டித் தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

உருளைகிழங்கை இரண்டாகவும், வாழைக்காயை நான்காகவும் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வாழைக்காய் சீக்கிரமாக வெந்துவிடும் என்பதால் சிறிது நேரத்தில் வாழைக்காயை மட்டும் தனியாக எடுத்துவிடவும். பிறகு உருளைக்கிழங்கு வெந்த பிறகு எடுத்து தோலுரித்து வைக்கவும்.
பிறகு இரண்டையும் நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, வாழைக்காய் கலவையைப் போட்டு நன்றாகப் பிரட்டிவிடவும்.
அதனுடன் தூள் வகைளைச் சேர்த்துக் கிளறிவிட்டு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
வதக்கிய கலவையை வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். ஒரு தட்டில் ரொட்டித் தூளை எடுத்துக் கொள்ளவும்.
தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவை நம் விருப்பத்திற்கேற்ற வடிவங்களில் செய்து, அதை ரொட்டித் தூளில் பிரட்டி பேக் செய்யவும்.
ஒரு பேனில் நெய் ஊற்றி சூடாக்கவும். நெய் உருகியதும் அதில் ப்ரெட் மசாலாவைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
சூடான, சுவையான ஆலு டிக்கியா ரெடி. கெட்சப்புடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லாருக்கு. ஸ்டார் மின்னுது. சூப்பர்

Be simple be sample

ஆலு டிக்கியா நல்லா இருக்கு. செய்முறையும் ஈசி.ஸ்டார் சூப்பர்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஆலு டிக்கியா அருமை, ஈஸி அன்ட் டேஸ்டி குறிப்பு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *