ப்ரெட் பகோலா

தேதி: January 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஸ்ரீஆனந்தி அவர்கள் வழங்கியுள்ள பிரட் பகோலா குறிப்பு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய ஸ்ரீஆனந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

ப்ரெட் - 5 ஸ்லைஸ்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - ஒரு துண்டு
உருளைக்கிழங்கு - கால் கிலோ
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - அரை கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

ப்ரெட்டைத் துண்டுகளாக்கி அதில் தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை அரை மணி நேரம் வேக வைத்து தோல் உரித்து நன்றாக மசித்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மசாலாத் தூள் மற்றும் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைப் போட்டுக் கிளறவும்.
மசாலா பதத்திற்கு வந்ததும் ப்ரெட், தயிர் கலவையைப் போட்டு 5 நிமிடங்கள் நன்றாகக் கிளறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான ப்ரெட் பகோலா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தர்ஷா அக்கா வாழ்த்துக்கள், எல்லா குறிப்புமே சூப்பர்.
விருப்ப‌ பட்டியல்ல‌ சேர்த்தாச்சு, டோ நட் பார்சல் பீளீஸ்.
வத்தல் குழம்பு இன்னும் சூப்பர்.

மற்ற கிச்சன் குயின்களுக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரொம்ப நன்றி சுபி. உங்களுக்கு கொடுக்காமலா?
எல்லா கிச்சன் குயின் சார்பாகவும் நன்றிகள்..