வத்த குழம்பு பேஸ்ட்

தேதி: January 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஹவ்வா அலியார் அவர்களின் வத்த குழம்பு பேஸ்ட் என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஹவ்வா அலியார் அவர்களுக்கு நன்றிகள்.

 

பெரிய வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
புளி - ஒரு நடுத்தரமான எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
பூண்டு - 10 பற்கள்
கடுகு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
ஒரு நிமிடம் கழித்து மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றுடன் உப்பு மற்றும் புளிக் கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
காரசாரமான வத்த குழம்பு பேஸ்ட் ரெடி. இதனை டப்பாவில் அடைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்புகள் எல்லாமே சூப்பர்.படங்களும் தெளிவா இருக்கு. வத்த குழம்பு பேஸ்ட் அருமையா இருக்கு. வாழ்த்துக்கள் தர்ஷா.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மீண்டும் என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றிகள்..

வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி..

சூப்பர். கலக்கறீங்க‌. வாழ்த்துக்கள். எல்லாமே அருமையா இருக்கு கிட்சன் குயின்

எல்லாம் சில‌ காலம்.....