எக் ஷெல் போட்டோ ஃப்ரேம்

தேதி: January 6, 2015

4
Average: 3.3 (3 votes)

 

எக் ஷெல்
ஃப்ளை உட்
பெயிண்ட் - ரோஸ் மற்றும் பச்சை நிறம்
டபுள் சைடட் டேப்
ப்ரஷ்
ஃபெவிக்கால்

 

ஃப்ளை உட்டை செவ்வக வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதன் நடுவில் ஒரு போட்டோவை வைத்துப் பார்த்து, போட்டோவின் அளவைவிட ஒரு சுற்று சிறியதாக இருக்குமாறு ஒரு செவ்வக வடிவம் வரைந்து, அதனை வெட்டி நீக்கிவிடவும். ஃப்ரேமின் பின்புறம் வைத்து ஒட்டுவதற்கு போட்டோவின் அளவைவிட சற்று பெரியதாக, செவ்வக வடிவத் துண்டு ஒன்றைத் தனியாக வெட்டி எடுத்து வைக்கவும்.
முட்டை ஓட்டினை சிறுத் துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
பிறகு ஃப்ரேமில் ஃபெவிக்கால் தடவி, அதில் உடைத்து வைத்திருக்கும் முட்டை ஓட்டை ஒட்டவும்.
இதே போல் ஃப்ரேம் முழுவதும் ஒட்டவும். மிகவும் சிறிய துண்டுகளாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
அதன் பிறகு ரோஸ் மற்றும் பச்சை நிற பெயிண்டைக் கொண்டு, ஃப்ரேமின் ஓரங்களில் பூக்கள் மற்றும் இலைகள் வரைந்து கொள்ளவும்.
ஃப்ரேமின் பின்புறம் வைப்பதற்காக நறுக்கி வைத்திருக்கும் செவ்வகத் துண்டை எடுத்து, அதன் இரு ஓரங்களிலும் படத்தில் காட்டியுள்ளவாறு மெல்லியதாக டபுள் சைடட் டேப்பை நறுக்கி ஒட்டவும்.
அதை முட்டை ஓட்டினை ஒட்டி வைத்துள்ள பெரிய ஃப்ரேமின் பின்புறத்தில் ஒட்டிவிடவும்.
போட்டோ கீழே விழாமல் இருப்பதற்காக, பின்புறம் ஒட்டிய செவ்வகத் துண்டின் கீழ் பகுதியில் சிறிது டபுள் சைடட் டேப்பை நறுக்கி ஒட்டிவிடவும். பிறகு அதன் மேல் பகுதியிலிருக்கும் இடைவெளியின் வழியாக போட்டோவைச் சொருகிவிடவும்.
அழகான போட்டோ ஃப்ரேம் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாய் இருக்கிறது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகு.
செய்வதும் எளிது:)

சூப்பர்ப் செண்பகா. ட்ரை பண்ணுவேன்.

‍- இமா க்றிஸ்

போட்டோ ப்ஃரேம் ரொம்ப‌ அழகா இருக்கு. கண்டிப்பாக‌ முயற்சிக்கிறேன்.

அன்புடன்
பாரதி வெங்கட்

Very nice