தேதி: January 8, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கீதா ஆச்சல் அவர்கள் வழங்கியுள்ள பால் ரவா உருண்டை என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கீதா ஆச்சல் அவர்களுக்கு நன்றிகள்.
ரவை - ஒரு கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - 2
சர்க்கரை - அரை கப்
நெய் - 2 தேக்கரண்டி
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.

ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி, ரவையை வறுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும். பால் கொதித்த பிறகு அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கரையவிடவும்.

அதனுடன் வறுத்த ரவை மற்றும் மீதமுள்ள நெய்யைச் சேர்த்து வேகவிடவும்.

ரவை நன்றாக வெந்த பிறகு பொடித்த ஏலக்காய் தூவி கிளறி இறக்கி, சிறிது நேரம் ஆறவிடவும்.

கலவை ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும். சுவையான பால் ரவா உருண்டை ரெடி.

ஓரிஸா மாநிலத்தில் பண்டிகையின் போது செய்யும் ஒரு வகை இனிப்பு இது.
Comments
ஹேமா..
இன்றைய கிச்சன் குயினுக்கு எனது வாழ்த்துக்கள். எல்லாக் குறிப்பும் நல்லா இருக்கு ஹேமா.பால் ரவா உருண்டை சூப்பர். கடைசி படம் வெகு ஜோர். மேலும் குறிப்புகள் வழங்க வாழ்த்துக்கள்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ஹேமா சிஸ்
எளிமையான ரெசிபி. அழகாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்!
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
Arumaiyaga eruku thanks
Arumaiyaga eruku thanks sister
கவிதை என் சுவாசமும் நேசமும்