ஊர்மணம் - உங்கள் ஊரின் சிறப்பு

அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் எங்களது வணக்கங்கள். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்று கவிஞர் பாடினார். அந்த அமுதாகிய தமிழ் மொழியால் இங்கே அறுசுவையில் நாம் அனைவரும் இணைக்கப்பட்டு, பல்வேறு அமுது குறித்து ஆலோசித்து, விவாதித்து, விவரித்து வருகின்றோம். இன்று உலகின் பல்வேறு நாடுகளில், நகரங்களில் வசிக்கும் தமிழர்களாகிய நீங்கள் அனைவரும், தமிழகத்தின் ஏதோவொரு ஊரில் இருந்து புறப்பட்டவர்கள்தான். அது பிரசித்திப் பெற்ற நகரமாக இருக்கலாம். யாரும் அறிந்திராத சிறு கிராமமாக இருக்கலாம். அந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர் என்ற முறையில், அந்த மண்ணின் பெருமை குறித்து அறிந்தவர் உங்களைவிட வேறு யாரும் இருக்க முடியாது.

விரைவில், தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும், உணவுத்துறைச் சார்ந்த பிரசித்திப் பெற்ற பல விசயங்களை சேகரித்து, மற்றவர்கள் அறியும் பொருட்டு அறுசுவையில் வெளியிட உள்ளோம். இதற்கு உதவும் முகமாக, உணவுத்துறை சம்பந்தமாக நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரில் ஏதேனும் சிறப்பு இருந்தால் அவற்றை இங்கே தெரிவிக்கவும். உதாரணமாக, உங்கள் ஊரில் உள்ள சிறப்பு வாய்ந்த உணவகம், சிறந்த சமையல் கலைஞர், சிறப்பு உணவு, சிறப்பாய் சமைக்கக்கூடிய தனிநபர்கள், கோயில் பிரசாதம், நல்ல டீக்கடை, பேக்கரி, ஸ்வீட் ஸ்டால்... இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழக எல்லைக்குள் அடங்கிய எந்த நகரம், கிராமமாக இருந்தாலும் குறிப்பிடவும். எங்கள் குழுவினர் உங்களது ஊருக்குச் சென்று, மேலும் விபரங்களை சேகரித்து, படங்கள் எடுத்து, கட்டுரையாக அறுசுவையில் வெளியிடுவர். இதற்கு உதவும்விதமாக உங்கள் ஊரைப் பற்றின விபரங்களை சற்று விரிவாகக் குறிப்பிடவும். எந்த மாவட்டம், எந்த நகரம், எந்த ஊருக்கு அருகில் உள்ளது, எப்படிச் செல்லலாம் என்பதையும் குறிப்பிட்டால், எங்களது குழுவினர் சரியான இடத்தைச் சென்றடைய மிகவும் உதவியாக இருக்கும்.

அன்புடன்
பாபு

Hi, Good attempt. Best Wishes. I would recommand your team to visit Puthur Mess, the very famous non vegetarian mess, located on the roadside between Chidambaram and Sirkazhi(Nearby Puthur polytechnic). Though that place is not my native, I been to the mess many times when I was doing my college at Chidambaram. To your surprise, there will be no board and the mess has no name at all. But it will be easy to identify.

திரு பாபு அவர்களுக்கு, இதில் பங்கு கொள்ள சென்னை வாசிகளால் முடியுமா? காரணம் சென்னை மண்ணுக்கென்று பாரம்பரிய உணவுகள் கிடையாதல்லவா,ஆகவே அந்த மண்ணில் அவர்கள் சுவைத்த உணவு பற்றிய ஏதாவது செய்திகள் குறிப்புகள் கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களோ, மாட்டீர்களோ என்று தான் சந்தேகமாக இருந்தது.ஆகவே தான் கேட்டேன்.நன்றி.

அட்மின் அவர்களுக்கு,
இது ஒரு அருமையான தலைப்பு! இதில் அவரவர் ஊரில் உள்ள உணவுத்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும்தான் கூறவேண்டுமா? அல்லது விளக்கமாக சொல்ல முடியும் என்றால் மற்ற ஊரில் நாம் அறிந்தவற்றையும் சொல்லலாமா?

திரு.விஜய் அவர்களுக்கு, மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்ட அந்த மெஸ் மிகவும் பிரபலமானது. நான் பலமுறை சாப்பிட்டு இருக்கின்றேன். சீர்காழி, சிதம்பரம் பாதையை 12 மணியளவில் கடக்குமாறு எனது பயண நேரத்தை எப்போதும் அமைத்துக் கொள்வேன். 12 மணிக்கே சென்றால்தான் இடம் கிடைப்பதில் பிரச்சனை இருக்காது. கோழி, மீன் கறியையெல்லாம் விடுங்கள். அந்த கெட்டித் தயிர்..! ஆஹா, வேறு எந்த உணவுவிடுதியிலும் கிடைக்காது.

நிச்சயம் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த மெஸ்ஸைப் பற்றிய கட்டுரையை விரைவில் வெளியிடுகின்றோம்.

அன்புச் சகோதரி மனோகரி அவர்களுக்கு,

உள்குத்து புரிகின்றது :-) சென்னைக்கென்று பாரம்பரிய உணவுகள் கிடையாது என்று நான் தீர்ப்பு வழங்கவில்லை. இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று என்னுடைய அறியாமையைத்தான் நான் வெளிக்காட்டியிருந்தேன். அந்த விவாதத்தை மீண்டும் தொடரவேண்டாம்.

இந்தப் பதிவில், பாரம்பரிய உணவுகளைப் பற்றி மட்டும்தான் இங்கே குறிப்பிட வேண்டும் என்பதுபோன்ற வேண்டுகோளை நான் முன்வைக்கவில்லை. அதே போல், வெறும் உணவினை மட்டும்தான் குறிப்பிடவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. உணவுத்துறை சம்பந்தமான எந்த தகவலாக இருந்தாலும் தெரிவிக்கலாம். நீங்கள் பிறந்து, வளர்ந்த சென்னையில் நீங்கள் அறிந்தவற்றைப் பற்றி தாராளமாக இங்கே குறிப்பிடலாம். நாங்கள் சென்று, விபரங்களை சேகரிக்க வசதியாக இருக்குமாறு விளக்கம் கொடுக்கவும்.

மற்றொரு விசயம், நீங்கள் குறிப்பிடும் விசயம் அந்தப் பகுதியில் பிரபலமானதாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் பிடித்த விசயமாக இருக்கக்கூடாது.

உதாரணமாக, எங்கள் ஊரில் ஒரு டீக்கடையில் தயாராகும் மெது வடை மிகவும் பிரபல்யம். அந்த கடை வாசலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். எனக்கு அந்த வடை பிடிக்காது. மற்றொரு கடையில் தயாராகும் வடைதான் பிடிக்கும். அதைப் பற்றிதான் பெருமை பேசுவேன். இருந்தாலும், செய்தி வெளியிடவேண்டும் என்று வரும்போது, அந்த பிரபலமான கடையைப் பற்றிதான் நான் எழுத வேண்டியிருக்கும். இதன் சாரம் உங்களுக்குப் புரியும் என்று எண்ணுகின்றேன். எனவே, ஓரளவிற்காவது பிரபலமான விசயங்களை குறிப்பிடவும்.

அன்புச் சகோதரி அஸ்மா அவர்களுக்கு,

தாராளமாக சொல்லலாம். இரண்டு கட்டுபாடுகள்தான் நாங்கள் விதித்துள்ளது. 1. உணவுத்துறை சம்பந்தமானது 2. தமிழக (பாண்டிச்சேரியையும் உள்ளடக்கிய) எல்லைக்குள் அடங்கியது.

உங்கள் சொந்த ஊராக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் கேள்விப்பட்ட ஊராக கூட இருக்கலாம். நான் முன்பே குறிப்பிட்டதுபோல் விபரங்கள், நாங்கள் சென்று சேகரிக்க போதுமானதாக இருக்கவேண்டும். (வேலைப்பளு காரணமாக இன்னமும் காரைக்கால் செல்ல முடியவில்லை. நீங்கள் கேட்ட பட்டர் கோவா குறிப்பை பெறுவதற்கு தாமதம் ஆகின்றது. மன்னிக்கவும். முடிந்தால் இந்தப் பகுதி சம்பந்தமாக நாகூர் ஆண்டவர் அல்வா கடைக்காரரைப் பேட்டி எடுத்து, அந்தக் குறிப்பினை வாங்கி வெளியிட முயற்சி செய்கின்றேன்.)

Ok! அதுபோன்ற தகவல்களை நான் அறிந்தவரை இந்த பகுதியில் தெரிவிக்கிறேன். நன்றி!

கோவில்பட்டி சேவு ரொம்ப famous. திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி என்று கேட்டு எழுதுங்கள்.

திரு பாபு அவர்களுக்கு பதில் எழுதியதற்க்கு மிகவும் நன்றி. தாங்கள் கூறியுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப்ப எனக்கு தெரிந்த தகவல்களைக் கட்டாயம் கூறுகின்றேன்.இப்பொழுது நினைவிற்க்கு வருவதெல்லாம் தனிபட்ட முறையில் பிடித்த விசயங்களே நினைவிற்க்கு வருகின்றன. ஆகவே பிரபலமான விசயங்களை நினைவுகூர்ந்து கட்டாயம் தெரிவிக்கின்றேன் நன்றி.

சகோதரர் அட்மின் அவர்களுக்கு நாகூர் ரஃபிக் ஸ்வீட்ஸ்டாலில் தயார் செய்யும் தம்ரொட் பற்றி கேட்டு எழுதுங்களேன்

மேலும் சில பதிவுகள்