2.6 month வயது குழந்தை

எனது குழந்தை இடது கையிலே சாப்பிடுகிறாள் ... வலது கை தானாக பழகி விடுமா இல்லையன்றல் பழக்க வேண்டுமா தெரிந்த தோழிகள் கூறுங்கள் .... சாப்பிட மட்டும் அவ்வாறு செய்கிறாள் ...

En paiyanum left hand la dhan sapadaran nanum evalo try panitan matha mudiyala..oru thadava doctor kita sonan avaru poga poga change panipanga neenga change panran solli kulainthai ku sapatu mela verupu vara mathir panidathinga nu sollitaru...athula irrunthu nanum vitutan...en kuda ukainthu sapidum podhu right la start panaran sudden ah left hand ku vanthadaran...avan entha work panalum left la dhan seiran...

thanks divya

//வலது கை தானாக பழகி விடுமா // சில குழந்தைகள், நாளாக ஆக மற்றவர்களைப் பார்த்துத் தாங்களாகவே வலது கையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

//இல்லையன்றல் பழக்க வேண்டுமா // ம்... கொஞ்சம் சொல்லிப் பார்க்கலாம். சிரமம் கொடுக்க வேண்டாம். இடது கையால் சாப்பிட்டால் என்ன தப்பு! அவருக்கு சாப்பிடுவதற்கு வலது கை வசதியாக இல்லை போல. அதிக அழுத்தம் கொடுத்தால் உணவில் ஈடுபாடு இல்லாமற் போகலாம். பழக்கத்தை மாற்ற முடியாவிட்டால் பரவாயில்லை. உணவுக்கு முன்னும் டாய்லட் போய் வந்த உடனேயும் கட்டாயமாகக் சவர்க்காரம் போட்டுக் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திவிடுங்கள் போதும்.

பார்ப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைக்க வேண்டாம். குழந்தை இயல்பாக இருக்கட்டும்.

‍- இமா க்றிஸ்

நீங்க சொல்லவதா தான் டாக்டர் என்னிடம் கூறினார் இமா அம்மா...நானும் அதுல இருந்து அவனை கட்டாய படுத்துவது இல்லை...

இடது கை பழக்கம் இருந்தா என்ன... ;) நான் சாப்பிடுறது, காய் நறுக்குறது தவிர மற்ற வேலைகள் முக்கால்வாசி இடது கை பழக்கம் உள்ளவர் தான். எங்க வீட்டிலும் எல்லாம் உல்டாவா பண்றேன்னு அடிக்கடி திட்டு விழும். முக்கியமா பொட்டு இடது கையில் வைக்கிறேன்னு அப்பா கூட திட்டுவார். வலது அளவு இல்லன்னாலும் இடதில் எழுத்தும் ஓரளவு நல்லாவே வரும் எனக்கு. நீங்க எல்லாம் சொல்ற மாதிரி எங்க அம்மா என்னை சின்ன வயசுல பழகாம விட்டுட்டாங்களோ?? ;) ஹஹஹா.

என் குட்டீஸும் சாப்பிட பழகின ஸ்டேஜுல இடது கை தான் பயன்படுத்தினாங்க, என்னை போலன்னு நினைப்பேன், அப்பறம் இரண்டு கையும் பயன்படுத்தினாங்க, இப்ப இடது கை பழக்கம் இல்ல யாருக்கும், எப்படி எப்ப பழக்கம் மாறுச்சுன்னு கவனமில்லை. சோ... கவலையை விடுங்க, இடதோ வலதோ பிள்ளைக்கு சரியான வசதியானதை பயன்படுத்தட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் இடது கை பழக்கம் உள்ளவள் தான் ஒரு முறை சைக்கிளில் இருந்து கிழே விழுந்து விட்டேன் அப்போது இடது கையில் எழும்பு முறிவு ஏற்ப்பட்டது..அப்போ இருந்து வலது கையில் எல்லா வேலைகளும் செய்ய பழக ஆரம்பிதேன்.இப்போது சமைக்கும் போது கூட இடது கை தான் வட்டம் வருகிற்து என் மாமியாரிடம் நல்ல திட்டு வாங்குவேன்...நீ இடது கை பழகினது மட்டும் இல்லாமால் ஏன் பையன்க்கும் பழக்கி விடற நீ என்ன பையன் வளக்கறனு திட்டு விழுது ....

thanks thozhikaley....

என் தோழி ஒருவர் இடது கையால எழுதி எழுதியே ஒவ்வொரு வருஷமும் உறுப்பெழுத்துப் போட்டில முதலாவது பரிசைத் தட்டிருவாங்க. அவருக்கு இடப்பக்கமா நாங்க இருந்து சாப்பிட்டால் கொஞ்சம் இடிபாடு. :-)

நான் வலக்கையை வாங்கு வாங்கு என்று வேலை வாங்கிருவேன். டென்னிஸ் எல்போ தொல்லை தர ஆரம்பித்த போது, "முடியாத வேலைக்கு ஆள் வைச்சுக்கங்க," என்றாங்க எங்க GP. "என் காரியம் நானே பார்த்தால்தான் எனக்குத் திருப்தி," என்றேன். "ஒரே ஆப்ஷன் இடது கையால் வேலை செய்யப் பழகுவது," என்றார். இப்போ நிறையக் காரியம் இடக் கையால் செய்கிறேன். டென்னிஸ் எல்போவையும் காணோம்.

இங்க, ஸ்கூல்ல ஒரு டீச்சர்... 18 வயசுல கை முறிஞ்சுதாம். ஒரே சமயம் போர்ட்ல ரெண்டுகையாலயும் எழுதுவாங்க. நானும் இடது கையால் எழுதலாம் என்று ட்ரை பண்ணினா... டாவின்ஸி எழுதின மாதிரி வருது. ;)) ஸ்கூல் சின்னவங்க மிரர் இமேஜ்ல எழுதுறது என்னோட திறமைன்னு நினைச்சிருக்காங்க. :-)
என்னைக் கேட்டால் இடது கையால் மட்டும் என்று அல்லாமல் 'இடது கையாலும்' வேலை செய்ய முடிவது ஒரு திறமைதான்.

‍- இமா க்றிஸ்

3 வயதில் என் மகன் ௬ட இடது கைல தான் சாப்பிட்டான் ஆனா இப்ப மாறிட்டான், இப்ப 5 வயசு. கவலை படாதீங்க மாறிடும்.

ரம்யா ஜெயராமன்

அன்புள்ள‌ சாரா
உங்கள் மகன் எல்லா வேலைகளையும் இடது கையினால் செய்தால் ஒருவேளை பரம்பரை பழக்கமாக‌ இருக்க வாய்ப்பு உள்ளது.
சாப்பிடும் போது நீங்களும் கூட‌ உட்கார்ந்து தனியாக‌ ஒருதட்டில் உங்களுக்கும் ஒரு தட்டில் அவனுக்கும் சாப்பாட்டினை வைத்து நீங்கள் சாப்பிடுவது போலவே சாப்பிடச் சொல்லுங்கள். கூடுமானவரை இடது கையில் அப்பளம் போல் எதையாவது கடித்துகொண்டு சாப்பிடும் படிச் செய்யுங்கள். இரண்டு கைகளும் சாப்பாட்டில் இருப்பது போல் ஆரம்பத்தில் காட்டி பின்னால் வலது கையைத்தான் சாப்பிடப் பயன்படுத்த‌ வேண்டும் என்பதை அவனுக்குப் புரியவையயுங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்