இன்ஸ்டன்ட் ரசகுல்லா

தேதி: January 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

திருமதி. எஸ். பிரியா அவர்களின் இன்ஸ்டன்ட் ரசகுல்லா என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பிரியா அவர்களுக்கு நன்றிகள்.

 

மில்க் மெயிட் - 200 கிராம்
பனீர் - 250 கிராம்
முந்திரி பருப்பு - 10
பாதாம் பருப்பு - 12
பிஸ்தா பருப்பு - 6
உலர்ந்த திராட்சை - 10
சர்க்கரை - 100 கிராம்
ஏலக்காய் - 4
குங்குமப்பூ - சிறிது
நெய் - 2 தேக்கரண்டி


 

பனீரை நன்கு உதிர்த்து (அ) துருவி வைத்துக் கொள்ளவும். நட்ஸைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை இவை நான்கிலும் முக்கால் பாகத்தைப் போட்டு, மிதமான சூட்டில் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு வாணலியில் துருவிய பனீரையும், மில்க் மெய்டையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
கலவை நன்கு கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை ஆகியவற்றைப் போட்டுக் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். குலோப் ஜாமூன் பாகு பதத்தில் இருக்க வேண்டும். இதில் ஏலக்காயைப் பொடி செய்து போட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
பாகு மிதமான சூட்டில் இருக்கும் போது தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை பாகில் போடவும். அதோடு மீதியுள்ள பருப்புகளையும் போட்டு, குங்குமப் பூவையும் சேர்த்து நன்கு ஊறிய பிறகு சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாலா எப்படி இருந்தது சுவை? இப்படி ஒரு செய்முறை இப்ப தான் பார்க்குறேன்னு நினைக்கிறேன், பார்த்த நினைவில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா இருக்கு.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்துக்கள் பாலா. ரசகுல்லா சூப்பரா இருக்கு .

Be simple be sample

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கு மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

டேஸ்ட் சூப்பரா இருந்துச்சி. நான் செய்த‌ அப்போ கொஞ்சம் தான் டேஸ்ட் பண்ணேன். கிட்சன்ல‌ வெச்சிட்டு கொஞ்சம் நேரம் கழித்து போய் பாத்தா வெறும் கிண்ணம் தான் இருந்துச்சி. ஆனா நான் டேஸ்ட் பண்ண‌ வரைக்கும் நல்லாவே இருந்துச்சி.

எல்லாம் சில‌ காலம்.....

மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

மனமார்ந்த‌ நன்றிகள். செய்து பாருங்க‌. டேஸ்டும் நல்லா இருந்துச்சி.

எல்லாம் சில‌ காலம்.....

Ithu pakka romba nala iruku mam

Kk

நன்றி கவி

எல்லாம் சில‌ காலம்.....