kulanthai utkaravillai

hai friends,
en payanuku 7 months start aagi 5 days aagivitathu innum utkara villai ellarum innum utkaralaya endru ketkiranga commana babies entha month utkara aarambipanga en payana eppadi utkaravaithu palaganum please yaravathu reply pannunga pa

Neenga ethum try pana venam kulainthaiya ukara try panuvanga..

பொதுவாக‌ குழந்தைகள் குப்புற‌ப்படுத்து தானாகத் தவழ்ந்து தானே தன்
கைகளை ஊன்றி நிமிர்ந்து மெதுவாகத் தன் கால்களை பின்புறமாக‌ மடக்கி தன்னை
நன்றாக‌ சமப்படுத்திக்கொண்டு பிறகு தான் உட்காருவார்கள். இது சாதாரணமாக‌
எட்டாவது மாதத்தில் தொடங்கும். இந்த‌ நேரத்தில் குழந்தைகள் தாங்கள் கேட்கும்
ஒலிகள் இசை தாள‌ ஓசை இவற்றுக்கு ஏற்ப‌ தன் உடலை பல‌ விதமாக உட்கார்ந்தவாரே ஆட்டி மகிழ்வார்கள். இந்த‌ வேளையில் தான் நாம் கவனமாக‌
இருக்க‌ வேண்டும். பொதுவாக‌ அறையின் மூலையில் உட்காரவைத்து சுற்றிலும்
தலையணைகளை வைத்து விடவேண்டும். சதா நம் கவனம் குழந்தைமேல் தான்
இருக்கவேண்டும். முன்னால் விழும் வாய்ப்பு அதிகம். குழந்தை தன் தலையை
இடித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உண்டு. தானாக‌ உட்காரும் முன் நீங்களாக‌
உட்க்கார‌ வைக்காதீர்கள். முதுகெலும்பு பிசகுவதற்கு வாய்ப்பு உண்டு. உரம் விழும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

hi. 7 months start aagittula utkara vachi. vachi pitichikongga onnum seyyathu..appatiye palakungga apram avangga pitikama utkaruvangga...naan en ponna 5 months la utkara vachi pitichean 5 months end avalave pitikkama utkara start pannitta..ippa 8 months. start aagiruku ippa chair pitichittu nikka try panra...namma babiesku utkara mattum palakitta pothum apram mutti poturathu, nikirathu , walk panrathu ellam avanggalave seythuruvanga...

எல்லாம் நன்மைக்கே

My dr told me nama utkaravaka vaka child petikum and nanu my leg ava front and back vechee toys tharuvan atha top to bottom thuki play panuvan 5 min apuram kela paduka vepan. pls dont do over just relaxla 1 or 2 times panuka then stand pana try panaka.

en crawl panama sit panuva but not individual panama erutha after crawl she sit individual. so try it. All The Best.

dear sis every babies different.i ve 7 month boy baby.ivanku nan 6 th startingleye utkara vachu palagiten.pillow vachu pudichukonga.onnum agathu.thambi utkara palagiduvan....en paiyan ippo elunthu ninnukuran...silathu namma try panlam.but sit pannikumpothu kavanama erunga.

7 மாதமே ஆன குழந்தை உட்காரவில்லையே என கவலைப் படாதீங்க. என் குழந்தைக்கு 10 வது மாதம் இப்போது. இப்போத்தான் உட்காருகிறாள். ஆனாலும் அடிக்கடி சரிந்து விழுந்து விடுவாள். இது மிக மிக நார்மலான மைல் ஸ்டோன் தான். மூத்தவள் ஐந்து மாதத்தில் உட்கார்ந்து விட்டாள். மைல் ஸ்டோன் (குழந்தையின் வளர்ச்சி) என்பது குழந்தைக்கு குழந்தை வேறு படும். நம்மை சுற்றி உள்ளவங்க அப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பாங்க. என் மூத்த மகள் 11 மாதமாயிருக்கையில் என் குடும்ப நபர் ஒருவர் என்னிடம் என் பிள்லை 10 மாதத்தில் நடந்து விட்டாளே, உன் குழந்தை இன்னும் நடக்கவில்லையா? அப்படிடின்னு போனில் கேட்டாங்க. நான் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. என் மகளுக்கு ஒன்றரை வயதிருக்கையில் வெறும் வார்த்தைகள் தான் சொல்கிறாள், வாக்கியங்கள் எதுவும் பேசவில்லையே. அப்போ குழந்தைக்கு பேச்சு வரலையா என்று கேட்டவங்களும் உண்டு :(
உங்க குழந்தைக்கு எந்த உடல் உபாதைகளும் இல்லாத பட்ச்சத்தில் 10 மாதத்தில் உட்கார்ந்தாலும் நார்மல் தான். நிறைய குழந்தைகள் தவழாமலே நடக்க துவங்குவதும் உண்டு. மத்தவங்க யாராவது கேட்டால் நான் லேட்டாத்தான் தவழ்க்ந்தேன், அது போலத்தான் என் குழந்தையுமிருக்கும் என்று சொல்லி விடுங்கள் :)

மேலும் சில பதிவுகள்