சிம்ளி

தேதி: January 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

கேழ்வரகு மாவு - ஒரு கப்
வறுத்த வேர்க்கடலை - அரை கப்
வெல்லம் - 100 கிராம்
நெய்
உப்பு


 

கேழ்வரகு மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடை மாவு பதத்திற்குப் பிசைந்து வைக்கவும்.
பிசைந்த மாவை அடைகளாகத் தட்டி, வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்தெடுத்த அடைகளை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு பொடித்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையைக் கொரகொரரப்பாக பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தைக் கட்டியில்லாமல் கத்தியால் சீவி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
அத்துடன் நெய் சேர்த்து நன்கு கலந்து உருண்டையாகப் பிடித்துப் பரிமாறவும். சுவையான, சத்தான, எளிமையான சிம்ளி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிம்ளி பெயரை வித்தியாசமா இருக்கு ரேவா.. குறிப்பும் ரொம்ப வித்தியாசமா இருக்கு.. நல்லா இருக்கு பார்க்க.. கலக்கு ரேவா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இதோடு வறுத்த‌ எள் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான‌ சுவையான‌ எளிமையான‌ குறிப்பு ரேவா:)

சுலபமான குறிப்பு. பார்க்க ஆசையா இருக்கு.

‍- இமா க்றிஸ்