காளான் புலாவ்

தேதி: January 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
காளான் - அரை கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
தயிர் - ஒன்றரை கப்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் - சிறிது
பன்னீர் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
புதினா, மல்லித் தழை - தேவையான அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பொடிக்க:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
அன்னாசிப்பூ - சிறிது
சாஜிரா - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி


 

காளானை டிஷ்யூ பேப்பரால் நன்கு துடைத்துவிட்டு நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். அரிசியை ஊற வைக்கவும்.
பொடிக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள் மற்றும் பொடித்த பொடியைச் சேர்க்கவும். பிறகு கரம் மசாலாத் தூள் மற்றும் வெள்ளை மிளகுத் தூள் சேர்க்கவும்.
அதனுடன் தக்காளி, புதினா, மல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டு வதக்கவும்.
பிறகு நறுக்கிய காளானைச் சேர்த்துக் கிளறவும்.
நன்றாகக் கிளறிய பிறகு தயிர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
பிறகு பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அரிசிக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு 20 நிமிடங்கள் சிம்மில் வேகவிட்டு இறக்கவும்.
சுவையான, மணமான காளான் புலாவ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

படங்கள் அனைத்து அருமை.. தெள்ள தெளிவா இருக்கு. காளான் புலாவ் அருமையா இருக்கு

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பார்க்கும்போது சாப்பிடனும் தோனுது.படம் எல்லாம் அருமையா இருக்கு

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

முசி படம் எல்லாமே கலக்கல். சூப்பர் பிரியாணி

Be simple be sample

குறிப்பினை வெளியிட்ட‌ டீமிர்க்கு மிக்க‌ நன்றி.

முதல் பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் ரொம்ப‌ நன்றி.ரேவதி.p

பதிவிர்க்கும்,பாராடிர்க்கும் மிக்க‌ நன்றி.கனகாமுத்து.

நன்றி ரேவதி.s

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அஸ்ஸலாமு அழைக்கும் முசி நலமா உங்க காளான் புலாவ் செய்தேன் ரொம்ப அருமயா இருந்தது மிக்க நன்றி

வ‌ அலைக்கும் சலாம்,நலம்.செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.