பருப்பு சட்னி

தேதி: January 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
உருட்டு உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
காய்ந்த‌ மிளகாய் - 3 (அ) காரத்திற்கேற்ப‌
சின்ன வெங்காயம் ‍- 10 (அ) பெரிய‌ வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான‌ அளவு
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
மல்லித் தழை ‍ - சிறிது


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
லேசாக‌ச் சிவந்த‌வுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தேங்காய் துருவல் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கி, கடைசியாக‌ தேங்காய் துருவல் சேர்த்துப் பிரட்டி ஆற‌விட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும்.
இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட பருப்பு சட்னி ரெடி.

தக்காளிக்கு பதிலாக புளி சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பருப்பு சட்னி சூப்பரா இருக்கு. இன்னைக்கு நைட் இட்லிக்கு இந்த சட்னிதான்.. ரொம்ப நல்லா இருக்கு ப்ரியா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பிரியா. சட்னி தேவைதான் இங்க அதிகம். சூப்பர்

Be simple be sample