கேரட் ஜாம்

தேதி: January 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட ஜெயராஜி அவர்களின் கேரட் ஜாம் என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜெயராஜி அவர்களுக்கு நன்றிகள்.

 

கேரட் - 600 கிராம்
சீனி- 2 கப்
லெமன் - ஒன்று
ஏலக்காய் - 2
தண்ணீர் - வேக வைப்பதற்கு


 

கேரட் ஜாம் செய்வதற்கு வேண்டிய பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஜாம் போட்டு வைக்கத் தேவையான சாடிகளை முதல் நாளே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.
கேரட்டைக் கழுவி சுத்தம் செய்து துருவி, 3 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.
துருவிய கேரட்டுடன் சிறிது நீர் சேர்த்து, 20 நிமிடத்திற்கு வேக வைத்து ஆறவிடவும்.
ஏலக்காயைப் பொடி செய்து வைக்கவும். லெமனைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஆற வைத்த கேரட்டை மசித்து, லெமன் சாறு மற்றும் சீனி சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து, விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
அனைத்தும் கரைந்து கெட்டியாகி ஜாம் பதம் வரும் வரை கிளறவும்.
ஜாம் பதத்திற்கு வந்ததும் இறக்கி பாட்டிலில் போட்டு வைத்து, மறுநாள் முதல் உபயோகிக்கலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுக்கு அண்ணளவாக 500 மில்லி லிட்டர் ஜாம் கிடைக்கும். அதற்கேற்றபடி, முன்பே கண்ணாடிச் சாடிகளைத் தெரிந்து தயாராக வைக்கவும். பாப்சீல் மூடிகளுள்ள சிறிய கண்ணாடி பாட்டில்களைத் தெரிந்து முன்பாகவே அவற்றையும் மூடிகளையும் சுத்தமாகக் கழுவி வைக்கவும். அனைத்தையும் ஒருமுறை வெந்நீரில் அலம்பி, அவனில் வைத்து மெல்லிய சூட்டில் உலரவிடவும். சூடாகியதும் அவனை அணைத்துவிட்டு அப்படியே விட்டு வைக்கவும். நிரப்பும் சமயம் பாட்டில்களை ஒரு மரத்தாலான வெட்டும் பலகையில் வைத்து நிரப்பவும். நிரப்புவதற்கு வேறு கரண்டி பயன்படுத்துவதானால் அவற்றையும் பாட்டில்களோடு அவனில் வைத்திருந்து எடுத்தால் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய‌ கிச்சன் ராணியாக‌ மகுடம் சூடிய‌ இமாம்மா விற்கு எனது மனமார்ந்த‌ வாழ்த்துக்கள். குறிப்புகள் அனைத்தும் அருமை,வித்தியாசம். படங்களும் அருமை. எளிமையான ஜாம் ஒன்று உங்கள் மூலமாக‌ கற்றுக்கொண்டேன் இமாம்மா. இதை எத்தனை நாள் வைத்து இருக்கலாம்.

Expectation lead to Disappointment

வாழ்த்துக்கு நன்றி மீனாள். :-)

//இதை எத்தனை நாள் வைத்து இருக்கலாம்.// ஜெயராஜி குறிப்புல இது பற்றி எதுவும் சொல்லி இருக்கல. இங்க சாப்பிட்டது போக மீதம் உள்ளது இன்னும் நல்லா இருக்கு. டெக்க்ஷர் பார்க்க இன்னும் ஒரு மாசம் இருக்கும் என்று தோணுது. சுத்தமான பாத்திரங்கள் பயன்படுத்தி ஸ்டெரிலைஸ்ட் பாட்டில்ல ஸ்னாப் சீல் பண்ணி வைச்சா 3 மாசம் ஆவது இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.

//குறிப்புகள் அனைத்தும் அருமை// குறிப்பு கொடுத்தவங்களுக்குத்தான் இந்த க்ரெடிட் எல்லாம். :-)

‍- இமா க்றிஸ்

Super akka.
Idha ethana naal vara store panalm ...
Akka recipes epadi post panuradu.konjam
solungha...enakm asayarku..

Super akka.
Idha ethana naal vara store panalm ...
Akka recipes epadi post panuradu.konjam
solungha...enakm asayarku..

முகப்பில் கிச்சன் குயின் 4 விளக்கங்கள் இருக்குது பாருங்க‌. இல்லனா வனி சிஸ்டரோட‌ பிளாக்ல‌ 4 பகுதியும் பாருங்க‌. வாழ்த்துக்கள் கிச்சன் குயின் இன் அட்வான்ஸ் .
நன்றி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Thank u ....akka

நன்றி சுல்தானியா.
ஒரு தடவை கமண்ட்டுக்கு சென்ட் கொடுத்தீங்கன்னா கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. டைம் எடுத்தாலும் வந்துரும். திரும்ப தட்டினா, 2 அல்லது அதுக்கும் அதிகம் தடவைகள் பதிவாகிரும்.
//ethana naal vara store panalm// மேல கமண்ட்ல சொல்லி இருக்கேன்.
//ecipes epadi post panuradu. ... enakm asayarku..// ஸ்டெப் 1 - தமிழ்ல டைப் பண்ணணும்.

‍- இமா க்றிஸ்

Super amma, pakkum podhea nalla irukku. Pic super. Nanum try panni pakkuren.

I love my parents...